உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

மறைமலையம் - 25

- உன்னுடைய குற்றம் ஒன்றும் இல்லை. இஃது எனது மாயையால்

உண்டாயது.

6

ஓ நான்முகக் கடவுளே, யான் சொல்லும் உண்மையைக் கேள்: யானே எல்லாக் கடவுளருக்குந் தலைவன்; யானே படைப்பவன் காப்பவன் அழிப்பவன்; எங்கும் நிறைந்த எனக்கு நிகராவார் எவரும் இலர். ஓ பிதா மகனே, யானே மேலான பிரமம், மேலான மெய்ம்மை, மேலான ஒளி, மேலான ஆன்மா, எங்கும் நிறைந்தவன், இவ்வுலகின்கட் காணப்பட்ட அல்லது கேட்கப்பட்ட அசையும் பொருள் அசையாப் பொருளாகிய எல்லாம் என்னிலிருந்தே உண்டாயின வென்று, ஓ நான்முகனே தெரியக் கடவாய். இருபத்துநான்கு தத்துவங்களால் ஆக்கப் பட்டனவாய் அறியப்படும் எவ்வெப் பொருளும் பண்டு தொட்டே என்னாற் படைக்கப்பட்டன; முடிவான நிலையில் என்றும் உள்ளனவாகிய அணுக்கள் ஒன்றுசேர்க்கப்பட்டன; எனது சினத்தினின்றும் உயிர்கள் தோன்றிப் படைக்கப்பட்டன. எனது மன நிறைவினின்று நீயும் பல அண்ட கோளங்களும் விளையாட்டாகப் படைக்கப்பட்டன. புத்திதத்துவமும் என்னால் விளையாட் விளையாட்டாகவே தோற்றுவிக்கப்பட்டது; அதன்பின் அதிலிருந்து மூவகை அகங்காரதத்துவமும், அவற்றிலிருந்து ஐந்து தன்மாத்திரைகளும் L மனமும் ஞானேந்திரிய கன்மேந்திரியங்களும் வான்முதலிய ஐந்து பூதங்களும், ஐம்பூதக்கலப்பிலிருந்து பல பொருள்களும் என்னால் விளையாட்டாகவே தோற்றுவிக்கப்பட்டன. அவரும் யானும் அங்ஙனம் பேசவே, பெருஞ் சினத்தாற் பகைமை கிளர, எம்மிருவர்க்கும் அவ்வூழி முடிவான கடலினிடையே அஞ்சத் தக்க தொரு பெரும்போர் மூண்டது. அந்நேரத்தில், எனது போரினை நிறுத்தி எமக்கு அறிவுறுத்தும் பொருட்டு, எல்லாப் பொருள்கட்கும் பிறப்பிடமாய், வரம்பு குறிக்கப் படாததாய், உரையளவுக் கெட்டாததாய், உவமையற்றதாய், முதல் நடு ஈறு இல்லாததாய், வளர்தலுங் குறைதலும் மாட்டாததாய், ஊழிமுடிவிற் பற்றி எரியும் நூறு அண்டங்களின் நெருப்பை ஒப்பதாய்., ஆயிரம் அனற் கொழுந்து வளையங் களாற் சூழப்பட்டதாய்த் திகழும் ஒளி வடிவானதோர் இலிங்கம் எமக்கெதிரே தோன்றியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/317&oldid=1589573" இலிருந்து மீள்விக்கப்பட்டது