உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

285

இவ்வாயிரஞ் சுடர்களையுங் கண்டு திகைப்புற்ற தேவனான அரி அங்ஙனமே திகைப்பெய்திய என்னை நோக்கி இவ்வனற் பிழம்பின் வரலாற்றை இவ்விடத்திலேயே ஆராயக் கடவம். ஒப்பற்ற இவ்வனற்றூணின் அடியைக் காண்டற்கு யான் கீழே செல்கின்றேன். நீ இதன் முடியைக் காண்டற்க விரைவாய் விடாமல் மேலே செல்லல் வேண்டும் செல்லல் வேண்டும்' என்று கூறினார். அங்ஙனம் பேசியவுடன் உலகுருவான திருமால் ஒரு பன்றிவடி வெடுத்தார். யானும் உடனே ஓர் அன்னப் புள்ளின் வடிவை எடுத்தேன் அக்காலந் தொட்டு மக்கள் என்னை ‘அன்னம் என்றழைக்கின்றார்கள். ஏனெனில் அன்னமே விராட்டு. எவர் என்னை அன்னம், அன்னம் என்றழைக்கின்ற னரோ அவர் அன்னம் (ஹம்சம்) ஆகின்றனர். தூய வெண்ணிறத்தையும், நெருப்புப் போன்ற கண்களையும் எல்லாப் பக்கங்களிலும் சிறகுகளையும் உடையோனாய் எண்ணமுங் காற்றும் போல் விரைந்து நான் மேலே போயினேன்.

பத்து யோசனை அகலமும் நூறு யோசனை நிகளமும் உள்ள ஒரு நீல மைக்குவியல் போன்றதாய், மேரு மலையைப் போற் பருமனுள்ள தாய்க், கூரிய வெண்மருப்புகளுடையதாய், ஊழிக்காலத்திறுதியிற் றோன்றுந் தெறுகதிர்போல் ஒளி மிக்கதாய், நீண்ட மூக்கும் உரத்த உருமொலியுங் குறுகிய கால்களும் அழகிய உறுப்புகளும் வாய்ந்ததாய், வெற்றி மறஞ் சிறந்து வலியதாய் நிகரற்றதாய் வயங்குங் கரியதொரு பன்றி வடிவத்தினை எல்லாப் பொருள் கட்கும் உயிராக உள்ள நாராயணரும் எடுத்துக் கொண்டு கீழ்நோக்கிச் சென்றார். அவ்வாறு ஆயிரம் ஆண்டுகள் விஷ்ணு கீழ் நோக்கி விரைந்து சென்றும், அவர் அவ்விலிங்கத்தின் அடியைக் கண்டிலர்.யானும் அவ்வளவுகாலம் என்னாற் கூடியமட்டும் அதன் முடிவை அறிய வேண்டி மேல்நோக்கி விரைந்துபோயும், ஓ நுங்கள் பகைவரை ஓ யழிப்போரே, அதன் முடிவைக் காணேனாய் அக்காலக் கழிவிற் கீழ் இறங்கினேன்; எல்லாத் தேவர்கட்கும் பிறப்பிடமும் பேரளவினருமான பகவான் விஷ்ணுவும் வெருக்கொண் பார்வையினராய தேய்வுற்று அங்ஙனமே விரைந்து மேலேறி வந்தனர். சம்புவாகிய சிவபிரான்றன் வியத்தகும் ஆற்றலை அறியாது மயங்கிக் கலக்குண்ட மனத்தினனாய் அப் பெரிய கடவுள் என்னைத் தலைக்கூடி, என்னோடு கூடப் பரமேசுவரன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/318&oldid=1589577" இலிருந்து மீள்விக்கப்பட்டது