உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

❖ - 25❖ மறைமலையம் - 25

L

எதிரிலும் பக்கங்களிலும் புறத்திலும் கீழ் விழுந்து வணங்கி இஃது என்! என்று வியத்துரைத்தான். அதன் பின், ஓ கடவுளர்க்குத் தலைவனே, அங்கே ஓம் ஓம் என்னுஞ் செவிப் புலனாம் ஓசை தெளிவாய்த் தொடர்புற்று எழுந்தது.

6

.

பின்னர் இஃது யாதாயிருக்கலாம் என்று ஆழ நினைத்துக் காண்டு அவர் என்னுடன் நிற்கையில், அவ்விலிங்கத்தின் வலப்புறத்தில் என்றும் நிலைபேறாய் உரக்க நிகழும் இவ்வெதிரொலியினைக் கண்டார். முதல் எழுத்து அகாரம், அதன் பின் உகாரம் நடுவில் மகாரம். ஓம் என்பது இவ்வொலிகளின் தொகுதி.(இலிங்கப்புராணம் 1,17)” இங்ஙனம் போந்த வடமொழி இலிங்கபுராணத்தின் பதினேழாம் அத்தி யாயத்திற்குப் பின் பதினெட்டாம் அத்தியாயத்தில் விஷ்ணு வானவர் சிவபிரானை வழுத்தும் ஒரு பதிகமும் அதன்பிற் சிவபிரான் அவர்முற்றோன்றி அவ்விருவருந் தன்னிடத்தி னின்றுந் தோன்றிய படியை அறிவுறுக்கும் அறிவுரையும், அதன்பிற் சிவபிரான் அவ்விரு வரையுந் தொட்டு வரந் தருமாறுங் கூறப்பட்டிருக்கின்றன.

னித் திருமால் அல்லாத மற்றைத் தேவர்களிற் பிரம தேவன் சிறந்தமையின் ‘நான் முகன் முதலாவானவர்' என்றருளிச் செய்தார்.

தொழுதல், பணிதல் என்பன ஒருபொருட் கிளவிகள்

திவாகரம்.

ஈண்டு ‘மூவுலகு' என்றவை நிலமண்டிலம் வளிமண்டிலம் வான் மண்டிலம் என்பனவாம்; அது மேலெடுத்துக் காட்டிய இராமாயண வாமனன் கதையிற் காண்க; இஃதறியாதார் திருமால் ஈரடியால் நிலத்தையும் வானையும் அளந்து, மூன்றாம் அடிக்கு இடமின்மையிற் பலியரசன் றலைமேல் அதனை வைத்து அவனைப் பாதலத்தில் அழுத்தினாரெனக் கதையைத் தமக்கு வேண்டியவாறு திரிந்துரைப்பர்.

இனித், திருமாலின் நெடிய வுருவத்தைக் காண்டலானும், அவர் திருவாய் மலர்ந்தருளுஞ் சொற்களைக் கேட்டலானும், அவரது அழகிய வுருவைக் காண்புழி வாய்நீர் ஊற அதனைச் சுவைத்தலானும், தெய்வத்தன்மையான் அவரைச் சூழ வீசும் நறுமணத்தைக் கவருதலானும், அவர்தந் திருவடிகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/319&oldid=1589582" இலிருந்து மீள்விக்கப்பட்டது