உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

309

இனிக், ‘கடவுள் நினைவுடையரான இவர் பொருள் ஈட்டுதலையும், ஈட்டிய பொருள்கொண்டு எமக்கு வேண்டுவன வெல்லாந் தந்து எம்மைப் பாதுகாத்தலையும் விடுத்து அந் நினைவிலேயே அழுந்தி எம்மை விட்டுப் பிரிவரே! யாம் என் செய்வேம்!' என்னுங் கவலை பெரிதுடையராய் மனைவி மக்கள் உறவி ரென்னுஞ் சுற்றத்தார் மிகப் பதைத்து அவரைத் தம் மாட்டு ஈர்த்தல் இயல்பாகலிற் ‘சுற்ற மென்னுந் தொல் பசுக் குழாங்கள், பற்றி யழைத்துப் பதறினர்' என்று அருளிச் செய்தார்.

‘சுற்றம்’ சுற்ற இருப்போர், பெற்றோர் உற்றார் மனைவி மக்கள் என்னுஞ் சுற்றத் தொடர்பு ஒருவர்க்குப் பிறவியெடுத்த ஞான்றுதொட்டே மக்கள் உளராயகாலம் முதல் இடையறாது வருதலிற் ‘சுற்றம்' என்னுந் தொல்பசுக் குழாங்கள் என்றார்.

‘பசு' என்னும் வடசொற் பாசத்தாற் கட்டப்படும் உயிர்களைப் பொதுப்படக் குறித்து நிற்பது. கட்டுதற்குக் நிற்பது.கட்டுதற்குக் கருவியாகலிற் கயிறு ‘பாசம்' என்று வடமொழியில் வழங்கப் படும். உயிர்கள் நாற்காலனவும் இருகாலனவு மென இரு கூற்றுள் அடங்கு மென்னும் இருக்குவேதம்; (இருக்குவேதம் 1,114) ஆகவே, மக்களெல்லாரும் இருகாற் பசுக்களுள் அடங்குவர். புறத்தே யாடு மாடுகளைப் பிணிக்குங் கயிறுபோல, அகத்தே உயிர்களின் அறிவைக் கட்டி நிற்கும் ஆணவமும் பாசமெனச் சைவ சித்தாந்தத்துட் கூறப்படும் என்க.

கடவுணினைவு வரப்பெற்றுக் கடவுளைச் சாரா முயல் வாரை அது செய்ய வொட்டாது தடை செய்தலிற் சுற்றத் தாராய உயர்தினையுயிர்களையும பசுக்குழாங்கள் என அஃறிணை யுயிர்கள் போல் வைத்து இழித்துக் கூறினார். இங்ஙனங் கூறுதல் ஆசிரியர் தொல்காப்பியனார் "குடிமை யாண்மை” (தொல்காப்பியம் சொல் 56) என்னுஞ் சூத்திரத்துக் கூறிய “செறற்சொல்" என்பதன்பால் அடங்கும்.

ஆரிய வேதங்களை உணர்ந்தோரான மீமாஞ்சகர் வேள்வியாற்றுதன் முதலாய விரதங்களே ஒருவற்கு வீடு பேற்றினை நல்குமாதலின் இதனைத் தருதற்கு இவற்றின் வேறாகக் கடவுள் என்றொருபொருள் வேண்டப்படா தெனவும், வேதங்கள் ஒருவராற் செய்யப்படாமல் என்றும் நிலைபேறா யுள்ளனவாமாகலின் அவை மட்டுமே மேற்கோளா மெனவும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/342&oldid=1589696" இலிருந்து மீள்விக்கப்பட்டது