உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308

என

மறைமலையம் - 25

வாளாகூறி வறிதே நாட்கழித்தல் பயமின்று என்று எளிதாய்க் கூறிப் போவாராகலின் அவரை அவர் பின் வைத்தார்: உண்மை கூறுவார் சொற்கேட்டும், தமக்கு அயலவ ராயினார் தாங்கண்ட பழக்கமாய்ச் சொல்லுஞ் சொற்கேட்டுங், கடவுள் நினைவு கொளப் பெற்றார்க்கு அந்நினை கலைதல் இயல்பாகலின், இவர்க்கு அடியார் தம்மைத் தப்புவித்த முதல்வனது அருட்பெருக்கின் பெருமை தெரிப்பார் முதற்கண் இவரை எடுத்தோதினார்.

ஆப்தம்' என்னும் வடசொல் ‘ஆத்தம்' எனத் திரிந்தது; ஆப்தமாவது உண்மை கூறுதல்; தாங் கண்ட உண்மையை மறையாது வந்துரைப்பார் தம்பால் அன்பு மிக்குள்ள நண்பரே யாகலின் அவர் ‘ஆத்தமானார்' எனப்பட்டார்.

ஆத்தமானாரும் அயலவரும் என உம்மை விரித்துக்

கொள்க.

தம்பாற் பகையும் நட்பும் ல்லாதவர் அயலவர், நொதுமலர் எனப்படுவர்; நண்பராவார் தமக்கு இனியவே தேடுவர்; பகைஞர் தீயவே சூழுவர்; நொதுமலர் அவ்விரண்டுஞ் செய்யா ராகலின் அவர் கூற்றுக்களும் மறுத்தற்கு ஆகா, அற்றேல், இவ்விரு திறத்தினரும் உண்மை யுரைப்பாரா யிருப்பவும், எல்லாவற்றிற்கும் முதலுண்மைப் பெரும் பொரு ளாகிய கடவுளை இல்லையெனக் கட்டுரைத்தல் ஒவ்வுமோ வெனின்; அவ்விருவரும் உலகத்துப் பொரு ணிகழ்ச்சிகளுள் தாந்தாம் அறிந்தவற்றைப் பிழையாது கூறுவரே யல்லாது, அப் பொருணிகழ்ச்சிகளுள்ளும் உள்ளுறையாய்க் கரந்துநின் றியலுங் கடவுட் பொருளை அறியமாட்டாராகலான் அது பற்றி அவர் உண்மையுரைப்பாராகாமையில்லை. உண்மையுரைப்பா ராகாமையில்லை. உலகியற் பொரு ணிகழ்ச்சி பொருணிகழ்ச்சி களை உள்ளவா றுரைத்தலா லன்றே. அவர் ‘கடவுளில்லை' எனச் சொல்லுங் கட்டுரையும் உண்மையே போலுமென மயங்குதற் கிடஞ் செய்து நிற்பதாயிற்று; உலகத்திற் பொய்யே சொல்லுவார் உரைகளை எவருந் தெளியா ராகலின், அவ்வியல்பினார் 'கடவுளில்லை' யெனக் கூறுஞ் சொற்களும் எவரானுந் தெளியப்படா வென்க.

6

'நாத்திகம்' என்பது ‘நாஸ்திகம்' என்னும் வடசொற் றிரிபாகும். அஃதாவது கடவுள் உண்மையை மறுப்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/341&oldid=1589691" இலிருந்து மீள்விக்கப்பட்டது