உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

311

கொண்ட அத்திரிபுணர்ச்சியைத் தம்மவரல்லாத பிறர்க்கும் புகுத்தி அவர் கொண்ட கடவுள் நினைவைச் சிதைக்க முந்தும் பெருமுயற்சியுடையராதல் தெரிப்பர் 'சமயவாதிகள் தத்தம் மதங்களில் அமைவதாக அரற்றி மலைந்தனர்” என்றருளிச் செய்தார்.

மதம் கோட்பாடு

-

'தத்தம் மதங்களே மோதுவோரும் உளர்.

அமைவதாக

என்று பாட

TL

அமைதல் - பொருந்துதல்; “ஆடுவார் நெஞ்சத் தலர்ந்த மைந்த காமம்” என்பதன்* (பரிபாடல் 6 105) உரையில் இப்பொருட்டாதல் காண்க.

66

அரற்றுதல் - வாய்விட்டுப் புலம்புதல்; இப்பொருட்டாதல் ‘கனவின் அரற்றின்று” என்பதன்*(புறப்பொருள் வெண்பா மாலை 11,9) உரையிற் காண்க. பொருளுண்மை ஆராய்ந்தறியும் மதுகையின்றித் தாந் தாம் பிழைத்துணர்ந்தவைகளையே அச்சமயவாதிகள் முன்னொடு பின் பொருத்தமின்றி உரத்துக் கூவுதலின் அவருரைகளை அரற்றுதலாகக் கூறினார்.

மலைதல் - பூசலிடுதல்; அஃதாவது போராடுதல்.

தீ

இனிக், கடவுளும் உயிரும் இல்பொருளென வலியுறுத்து மாறாடுதற்கண் நால்வகைப் பாகுபாடுடைய பௌத்ததத்தினும் ஆண்மைமிக்கது பிறிதின்மையின் ‘மிண்டிய மாயாவாத மெனுஞ், சண்ட மாருதஞ் சுழித்தடித்(து) ஆர்த்து' என்றருளிச் செய்தார். அற்றேல், உலகாயதத்திற்கும் இதற்கும் வேறுபா டென்னை யெனின்ன, உலகாயதம் நிலன் நீர் தீ வளி என்னும் நான்கு பொருளின்மேல் வேறொன்றனை உடம்படாது. மற்றுப் ாது.மற்றுப் பௌத்தமோ அறிவும், உயிரும், இருவினையும், உலகமும், கட்டு வீடுகளும், கட்டறுத்து வீடுபெறுதற்குரிய நல்லொழுக்க முறைகளுஞ் சைவத்துட் கூறுமாறே முதற்கட் கூறிப் பின்னர் அவை யெல்லாவற்றிற்குஞ் சூனியங் கோடலின் அது பெரிய தொரு மயக்கத்தினை விளைவிக்கும் கோட்பாடாம். இத்தகைய மயக்கத்தினை விளைவித்து மக்களை வஞ்சித்தல் பற்றியே மாயாவாதம் என அடிகளாலும் ஏனைத் தொல்லாசிரியராலும் வழங்கப்பட்டது. ஈண்டு மாயாவாதம் என்றது, அடிகள்

து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/344&oldid=1589705" இலிருந்து மீள்விக்கப்பட்டது