உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312

  • மறைமலையம் 25

6

காலத்திற்குப் பிற்பட்டெழுந்த கௌடபாதர் சங்கர ரென்னும் இவராற் கட்டப்பட்ட மாயாவாதம் அன்று. இது மேலும் உரைத்தாம். அற்றேற், சங்கரர் கட்டிய கொள்கை மாயாவாத மெனப் பெயர் பெற்றது எற்றாலெனின்; உலகமும் உயிரும் ருவினையும், கட்டு வீடுகளும், கட்டறுத்து வீடு பெறுமாறும், முழுமுதற் கடவுளியல்பும் முதலிற் சைவத்துட் கூறுமாறே கூறிவைத்துப், பின் நான் என்பதைத் தவிர ஏனைய வெல்லாம் வெறும் பாழெனக் கூறி மக்களை வஞ்சிக்கும் நீர்மையிற் சங்கரர் கொள்கை பௌத்தரின் மாயாவாதம் பொறலின் இதுவும் அப்பெயரான் வழங்கப் படுவதாயிற்று. பிற்றை ஞான்றை மாயாவாதம் ‘மறைந்த பௌத்தம்' என முன்னை யோராற் கூறப்பட்டமையினை மேலேயும் எடுத்துக் காட்டினாம்.

6

மிண்டிய திட்பங் காட்டிய: திட்பமுடையோரை மிண்டர் என்றல் பிங்கலந்தையினும், உலக வழக்கினுங் காண்க. பொருட் டி ண்மை இல்லையெனினும் அஃதுடையார்போற் சொல்லாற் பிறரை வெருட்டுதற்கண் மாயாவாதிகள் திண்ணிய ராதல்பற்றி, அவர்க்குள்ள இயல்பை அவர்தங் கோட்பாட்டின் மேலேற்றி 'மிண்டிய மாயாவாதம்' என்றார்.

கடுங்காற்றுத் தன்கட்பட்ட மெலிய பொருள்களைத் தான் நெல்லுமாறே ஈர்த்துச் செல்லுதல் போல, மாயாவாதமும் தன்கட்பட்ட மெல்லறிவினாரைத் தன் வழியிலன்றி அவர் வழியிற் செல்லவிடாமை தெரிப்பார் அதனைச் சண்டமாருத மாக உருவகப்படுத்தினார்.

சண்ட கடிய எனவும் 'மாருத' காற்று ருத' காற்று எனவும் பொருடரும் வடசொற்கள்.

சுழித்தற்றொழில் நீரினுங் காற்றினும் ஓரோவழித் தீயினுங்

காணப்படும்.

ஆர்ப்ப வென்னுஞ் செயவெ னெச்சம் ‘ஆர்த்து’ எனச் செய்தெனெச்சமாய்த் திரிந்தது.

இனி, உலகத்துப் பொருள்களை ஆராயும் இயற்கைப் பொருள் நூல்களும், உயிர் நூல் பயிர் நூல் உடம்புநூல் உளநூல் முதலியனவு மெல்லாம் பெரும்பாலும் இறைவ னின்றியே இவையெல்லாம் இயற்கையே தோன்றி நின் றழியு மெனக் கூறுதலால் இவைதம்மைக் கலாபேதத்த கடுவிடம் என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/345&oldid=1589711" இலிருந்து மீள்விக்கப்பட்டது