உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

313

‘லோக ஆயுத' என்னும் வடசொற்கள் லோகாயத எனப் புணர்ந்து தமிழில் உகரச்சாரியை பெற்று மதத்தை யுணர்த்துங்கால் 'உலோகாயதம்’ எனவும், அதனை யுடை யோனை யுணர்த்துங்கால் 'உலோகாயதன்' எனவும் நிற்கும்; ஆயத என்பதற்கு இழுக்கப்பட்ட என்பது பொருளாகலின், உலோகாயதன் என்பதற்கு உலகத்தால் இழுக்கப்பட்டவன் என்று பொருளுரைத்துக் கொள்க.

6

'கலா' நூல்; இது கல் என்னும் முதனிலையிற் பிறந்த தமிழ்ச்சொல்; தமிழிலிருந்து வடமொழிக்கட் சென்று வழங்கும் பலசொற்களுள் இதுவும் ஒன்று. கற்கப்படுதலின் நூல் கலை யென்னும் பெயர்த்தாயிற்று. அக்கலைதான் பல பிரிவுகளை யுடைமையிற் ‘கலாபேதத்த' என்றார்.

உலகாயதக் கொள்கையில் அகப்பட்டாரது அறிவு அதனால் நிலைகுலைந்து மேற்பட்டதொன்றனை அறிதற்கு வலியிலதாய் ஒழிதலின், அதனை

யுடையானை

ஒரு

வல்லரவாகவும், அவன் எழுதிய கலை நூல்களை அவ்வரவின் நஞ்சாகவும் உருவகப்படுத்தினார்.

பேதம் - வேறுபாடு; இது வடசொல்.

விஷம் - நஞ்சு; இவ்வடசொல் தமிழில் ‘விடம்’ எனத்

திரிந்தது.

எய்த வென்னும் செயவெ னெச்சம் எய்தி என்னுஞ் செய்தெ னெச்சமாகத் திரிந்தது.

அவ்வாறு ஒருபாற் பௌத்தமென்னும் மாயாவாதக் கொள்கையானும், மற்றொருபால் உலோகாயதக் கொள்கை யானும் தாம் இடைநின்று அலைக்கப்படுதலை ஒருபாற் புயற் காற்றானும் மற்றொருபாற் கொடியதொரு நச்சுப்பாம்பானும் அலைக்கப்படுதலோடு ஒப்பிட்டார். அங்ஙனம் அலைக்கப் பட்டதனைத் தெரிப்பார் ‘அதில்' என்னுஞ் சுட்டுச் சொல்

தலைப்பெய்துரைத்தார்.

.

ங்ஙனமெல்லாம் மாயாசத்திகளும், பல்வேறு வகை யினரான மக்களின் பிழைபாடான கோட்பாடுகளுந் தம்மைச் சூழ்ந்து கொண்டு தம்மை மயக்குறுத்தவும், இறைவன் தம்பாற் கொண்ட பேரிரக்கத்ாற் குருவடீவிற் றோன்றி அடியார் தம்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/346&oldid=1589716" இலிருந்து மீள்விக்கப்பட்டது