உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

திருவாசக விரிவுரை

கண்களி கூற நுண்டுளி அரும்பச்

சாயா அன்பினை நாடொறுந் தழைப்பவர் தாயே யாகி வளர்த்தனை போற்றி

-

315

தப்பாமே - அவற்றால் தவறுபடாமே, தாம் பிடித்தது சலியா - தாம் பிடித்த பிடியை இளைத்து விடாமல், தழலது கண்ட மெழுகது போல - தீயை எதிரே அணுகின மெழுகைப் போல, தொழுது உளம் உருகி அழுது உடல் கம்பித்து என்பதனை உளம் உருகித் தொழுது அழுது உடல் கம்பித்து என மாற்றி உள்ளம் உருகிப் பணிந்து அழுது உடம்பு நடுங்கி எனப் பொருளுரைக்க ஆடியும் அலறியும் பாடியும் பரவியும் - ஆடுதல் செய்தும் அலறுதல் செய்தும் பாடுதல் செய்தும் வணங்குதல் செய்தும், கொடிறும் பேதையுங் கொண்டது விடாது எனும் படியே ஆகி குறடும் அறிவிலியும் தாம் பிடித்ததை நெகிழ விடா என்னும் வகையே ஆகி, நல் இடைஅறா அன்பின் நன்றாகிய நடுவே அறுதல் இல்லாத அன்பினால், பசுமரத்து ஆணி அறைந்தாற் போல பச்சைமரத்தி னிடத்தே ஆணியை அடித்தால் ஒப்ப, கசிவது பெருகி - மன நெகிழ்ச்சி மிகுந்து, கடல் என மறுகி-கடலைப் போலச் சுழன்று, அகம் குழைந்து - உள்ளம் வாடி, அனுகுலமாய் மெய்விதிர்த்து அதற்கு இசைந்து உடம்பு நடுங்கி, சகம் பேய் என்று தம்மைச் சிரிப்ப - உலகத்தவர் தம்மைப் பேய் என்று சிரியாநிற்ப, நாணது ஒழிந்து - நாணத்தை விட்டு, நாடவர் பழித்து உரை கோணுதல் இன்றிப் பூணது ஆக என மாற்றி நாட்டிலுள்ளோர் தம்மைப் பழித்துக் கூறுஞ் சொற்களை மனங்கோணாமல் அணிகலனாக ஏற்றுக் கொண்டு சதுர் இழந்து அறிமால் கொண்டு சாரும் கதியது பரம அதிசயம் ஆக - யாம் வல்லேம் என்னுந் திறமையை இழந்து அறியும் மீதூரப் பெற்றுத் தாம் சார்தற்கு உரிய வீடுபேற் றின்பமே மேலான வியப்புக்கு

6

மாக.

டம்

-

5/

-

-

கற்றா மனம் எனக் கதறியும் பதறியும் - கன்றையுடைய ஆவின் மனம்போலக் கதறுதலைச் செய்தும் பதறுதலைச் செய்தும், மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது வேறு ஒரு தெய்வத்தைக் கனவினிடத்தும் நினையாதபடி, அருபரத்து ஒருவன் அவனியில் வந்து குருபரன் ஆகி அருளிய பெருமையை அறிதற்கரிய மேன்மைத் தன்மை யையுடைய ஒப்பற்ற முதல்வன் நிலத்தின்மேல் உருவு கொண்டு வந்து ஆசிரிய முதல்வனாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/348&oldid=1589726" இலிருந்து மீள்விக்கப்பட்டது