உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316

  • மறைமலையம் - 25

L

அமர்ந்து அருள்செய்த பெருந் தன்மையை, சிறுமை என்று இகழாதே - அத்துணை யெளிதிற் கிடைத்தமைபற்றி அதனைப் புல்லிதாக நினைத்து இகழ்ந்து விடாமே, திருஅடி இணையைப் இ பிறிவினை அறியா நிழலது போல முன்பின் ஆகி - திருவடிகள் இரண்டையும் பிறிது படுதலை அறியாத நிழலைப் போல முன்னும் பின்னும் ஆக நினைந்து, முனியாது அங்ஙனம் நினைத்தலை அலுத்து வெறாது, அத்திசை - அவ்வாறு குருபரன் எழுந்தருளிய திசையை நோக்கி, என்பு நைந்து உருகி நெக்கு நெக்கு ஏங்கி அன்பு எனும் ஆறு கரையது புரள - எலும்புந் தனது வன்றன்மை கெட்டு உருகக் கனிந்து கனிந்து இரங்கி அன்பு என்று சொல்லப்படும் ஆறு கரைமேற் புரண்ட செல்ல நல்புலன் ஒன்றி - நல்ல பொறி யறிவுகள் ஐந்தும் ஒன்றுபட்டு, நாத என்று அரற்றி தலைவனே என்று வாய்விட்டு புலம்பி, உரை தடுமாறி சொற்கள் குழறி, உரோமம் விலிர்ப்ப மயிர் சிலிர்க்க கரமலர் மொட்டித்து - கைம்மலர் குவித்து, இருதயம் மலர இருதயம் மலர - நெஞ்சம் விரிய, கண் களி கூர நுண்துளி அரும்ப கண்கள் களிப்பு மிகுத லாலே சிறிய நீர்த்துளிகளைத் தோற்றாநிற்க, சாயா அன்பினை நாடொறுந் தழைப்பவர் - கெடாத அன்பினால் நாடோறுஞ் செழிப்பவரை, தாயே ஆகி வளர்த்தனை போற்றி - தாயைப் போல நின்று வளர்த்த உனக்கு வணக்கம் என்றவாறு.

-

-

மேலெடுத்துக் காட்டியவாறு எத்துணையோ பல மாயைகள் தம்மைவந்து சூழ்ந்து கொள்ளவும் அவற்றுட்பட்டுப் பிழையுறாதும், இறைவனது வீடுபேற்றின்பத்தினைச் சாருந் தமது குறிப்பினின்றும் வழுவாதும் அதனைக் கடைப்பிடியாய்க் காண்டுள்ள மெய்யடியார்க்கு இறைவன் குருவடிவிற் போந்து அருள் செய்யுமாற்றினையும், அதனால் அவர் அன்பால் இன்புறு நிலையினையும் அடிகள் எடுத்தோதுவான் புகுந்தார்.

ஐம்பத்தெட்டாம் அடியில் உள்ள ‘சூழவும்' என்னும் னைக்குச் செயப்படுபொருளாவது எண்பத்தாறாம் அடியில் உள்ள ‘தழைப்பவர்' என்பதனைக் குறிக்குந் தம்மை என்னும் இரண்டன் உருபேற்ற இடப்பெயரே யாகலின், அது ‘சூழவும்’ என்பதன்முற் றொக்கு நின்றது; 'மற்றுத் தப்பாமே தாம் பிடித்தது சலியா' என்னும் இவ்வடியில் ‘தாம்' என்னும் அப்பெயர் பிடித்தது சலியா என்னும் வினைகட்கு வினை முதலாய் விரிந்து நின்றது. இத்திருவகவலின் முதலடி துவங்கி

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/349&oldid=1589731" இலிருந்து மீள்விக்கப்பட்டது