உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

317

எண்பத்தேழாம் அடிகாறும் போந்த சொற்றொடரிலக்கணம் இதுவாதல் அயி மாட்டாதார் ஐம்பத்தெட்டாம் அடியிற் போந்த எனைப் பல சூழவும் என்பதில் உள்ள எனை என்பதற்கு ‘என்னை' எனப் பொருள்கொண்டு என்னைப் பல சூழ்ந்து கொள்ளவும், என உரை கூறினார். முதல் எண்பத்தேழ் அடிகாறும் சாயா அன்பினை நாடொறுந் தழைப்பவர் என மாயாசத்திகளின் மாயத்திற்குத் தப்பிக் கெடாத பேரன்பிற் றழைத்த மெய்யடியாரை இறைவன் தாயாய் நின்று வளர்க்கு மியல்பினை அடிகள் எடுத்தோதுகின்றாரல்லது தம்மைப் பற்றி அங்ஙன முரையாமை யானும், ‘எனை’ என்பதற்கு என்னை எனப் பொருளுரைக்கப்பட்ட அச்சொல், 'தப்பாமே தாம் பிடித்தது சலியா' சகம் பேயென்று தம்மைச் சிரிப்ப, 'சாயா அன்பினை நாடொறுந் தழைப்பவர்' என்னும் அடிகளுட் போந்த தம் தம்மை தழைப்பவர் என்னும் படர்க்கையிடத்துப் பலர்பாற் பெயர்களோடு சென்றியைந்து பொருடராமை யானும் அவ்வாறுரைத்தல் அடிகள் திருவுளக் கருத்துக்கு மாறாமென்க.

அற்றேல், 'யானை முதலா எறும் பீறாய, ஊனமி லியோனியி னுள்வினை பிழைத்தும்' என்றற் றொடக்கத்துத் திருவடிகளி னெல்லாம் அடிகள் அவற்றுக்கெல்லாந் தாம் தப்பி வந்தவாறு போல்வதொரு குறிப்புப் புலனாம்படி அங்ஙனங் கூறிய தென்னை யெயின்; மெய்யடியார் அவற்றுக்கும் ஏனை மாயா சக்திகட்குந்தப்பி இறைவன் றிருவரு ணெறி சார்ந்தமை தெரிக்கவே, மெய்யடிமைத் திறம் பிறழாத அடிகள் தாமும் அவற்றுக்கெல்லாந் தப்பி இறைவனால் அடிமை கொள்ளப் பெற்ற வரலாறும் அம்மெய்யடியார் திறத்துள் அடங்குமாகலின் அடிகள் தாமும் அவற்றுக்குத் தப்பித் திருவரு ணெறி சார்ந்ததொரு குறிப்பு ஆண்டுப்புலனாம்படி வைத்தமை பற்றி வரக் கடவதாகிய இழுக்கு ஒன்றுமில்லை யென்க. எனினும், இத்திருவகவல் முதற்பகுதியின் சொன்முடிவு பொருண் முடிவுகளை ஆய்ந்து நோக்கும்வழிச் சாயா அன்பினை நாடொறுந் தழைப்பவர் எனப் படர்க்கையிடத்தில் வைத்து மெய்யடியார் வரலாறே இதன்கட் கூறப்படுகின்ற தென்பது இனிது விளங்கா நிற்கும்; அதனால் ‘எனை’ என்பதற்கு என்னை' எனப் பொருளுரையாமல் எவ்வளவோ என

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/350&oldid=1589736" இலிருந்து மீள்விக்கப்பட்டது