உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318

மறைமலையம் - 25

வுரைத்துத் தப்பா மேதாம் பிடித்தது சலியா என்னும் இவ்வடியோடும், மேல்வந்து முடியும் சாயா அன்பினை றுந் தழைப்பவர் என்னும் அடியோடும் பொருளி யைத்துக் கொள்க.

நாடெ

தப்பாமே - தவறாமே; “பார்ப்பார்த் தப்பிய" என்புழி (புறநானூறு 34) இப்பொருட்டாதல் காண்க.

சலியா-சலியாமல்;

சலியா- சலியாமல்; அதாவது இளைத்துக் கைவிடாமல்; சலியாமல் என்று நிற்கற் பாலதாகிய எதிர்மறை வினையெச்சம் ஈறுகெட்டுச் ‘சலியா' என நின்றது. 'காக்கை கரவா கரைந் துண்டும்' என்புழியும் (திருக்குறள் 527) கரவாமல் என்னும் எதிர்மறைவினை யெச்சம் ஈடுகெட்டுக் ‘கரவா' என நின்றமை

காண்க.

‘தழலது' 'மெழுகது' என்பவற்றில் அது பெயர்ப் பொருளை அசைத்து நின்ற அசைநிலை.

கம்பித்தல்' என்பது நடுங்கு எனப் பொருள்படும் ‘கம்ப என்னும் வடசொன் முதனிலையிற் பிறந்தது.

-

கொடிறு குறடு; பிங்கலந்தை; குறடு தான் பற்றியதனைத் தானாகவே விடாது; அறிவிலியுந் தான் பிடித்ததனை விடான், கொடிறு என்னும் அஃறிணைச் சொல்லும் “பேதை” என்னும் உயர்திணைச் சொல்லும் ஒருங்கியைந்து இழிபினால் ‘விடாது’ என்னும் அஃறிணைமுடி பேற்றன. அற்றேல், அவை யிரண்டு சொல்லாகலான் விடா எனப் பன்மை வினையன்றே ஏற்கற் பாலன; 'விடாது' என ஒருமை வினை கொண்டு முடிந்த தென்னை யெனின்; கொடிறும் பேதையுங் கொண்டது. விடாமைக்கண்ட ஒரே தன்மையவா யிருத்தலின், அவை சொல்லால் இரண்டாயினும் ஒருமைப் பயனிலைகொண்டு முடிந்தன. “தானுந் தேரும் பாகனும் வந்தென் னலன் உண்டான்’ எனப் பலபெயரும் விரவிச் சிறப்பினால் உயர்திணை ஆண்பால் முடிபு ஏற்றாற் போலவும்,

“தொல்லை நால்வகைத் தோழருந் தூமணி நெடுந்தேர் மல்லற் றம்பியும் மாமனும் மதுவிரி கமழ்தார்ச்

செல்வன் றாதையுஞ் செழுநக ரொடுவள நாடும் வல்லைத் தொக்கது வளங்கெழு கோயிலுள் ஒருங்கே"

""

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/351&oldid=1589741" இலிருந்து மீள்விக்கப்பட்டது