உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

-

345

அமுதக்கடலே போற்றி, ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி திருவேகம்பத்தில் உறையும் எந் தலைவனே போற்றி, பாகம் பண்உருஆனாய் போற்றி டப்பாகம் பெண்வடிவு ஆனவனே போற்றி, பராய்த்துறை மேவிய பரனே போற்றி - திருப்ப ராய்த் துறையிற் பொருந்தின மேலோனே போற்றி, சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி திருச்சிராப்பள்ளியிற் பொருந்திய சிவபெருமானே போற்றி, மற்று ஓர் பற்று இங்கு அறியேன் போற்றி - வேறு ஒரு பற்றுக்கோடும் இவ்விடத்தே அறியேன் பெருமானே போற்றி, குற்றாலத்து எம் கூத்தா போற்றி - திருக்குற்றாலத்தில் எழுந்தருளியிருக்கிற எம் கூத்தனே போற்றி, கோகழி மேவிய கோவே போற்றி - திருப்பெருந் துறையில் விரும்பி எழுந்தருளிய அரசே போற்றி, ஈங்கோய்மலை எம் எந்தாய் போற்றி - திருவீங்கோய் மலையில் அமரும் எம் தலைவனே போற்றி, பாங்கு ஆர் பழனத்து அழகா போற்றி - அழகு நிறைந்த திருப்பழனத்தில் இருக்கும் அழகனே போற்றி, கடம்பூர் மேவிய விடங்கா போற்றி திருக்கடம்பூரில் விரும்பியிருந்த ஆண்மையுடையோனே போற்றி என்றவாறு. எந்தை - - எம் தலைவன்; “எந்தையொடு கிடந்தோர்" என்பதன்* (புறநானூறு 19) உரையில் இப்பொருட்டாதல் காண்க.

-

“உலகமே உருவமாக”* (சிவஞானசித்தியார் 5,7) நிற்கும் முதல்வற்கு முகிற்குழாம் சடையாகவும், அம்முகலிற் றங்கு நீர் சடைக்கட் டங்கு கங்கை யாகவுங் கொள்ளப்படுமாகலிற் 'சடையிடைக் கங்கை தரித்தாய்' என்றார்.

சடை என்பது நெட்டி; ஒன்றோடொன்று பிணைந்து நெட்டி போற் றிரண்டிருக்கும் பின்னல் மயிரும் சடையெனப் பெயர் பெறலாயிற்று. "வேணியும் வேருங் கிடையுஞ் சடையெனல்” யெனல்” என்பது பிங்கலந்தை. இத் தமிழ்ச்சொல் வடமொழிக்கட் சென் ‘ஜடா’ எனத் திரிந்து வழங்கும். 'கங்கா’ என்னும் வடசொற் ‘கங்கை' எனத் திரிந்தது. 'தரி' என்னும் வடசொல் தாங்கு என்னும் பொருட்கண் வரும்.

-

அமர்தல் உவந்திருத்தல். “அகனமர்ந்து செய்யாள் உறையும்” என்று* (திருக்குறள் 92) திருக்குறனினும் போந்தது.

‘சீர்’ என்னுஞ் சொல் புகழ் அழகு செல்வஞ் சீர்மை என்னும் பொருள்களை உணர்த்துதல் திவாகரத்திற் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/378&oldid=1589869" இலிருந்து மீள்விக்கப்பட்டது