உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346

அண்ணல்

  • மறைமலையம் 25

பெருமையிற் சிறந்தோன். இச்சொல் விளியேற்றக்கால் அண்ணால் என அயல் நீண்டு பின்னர்க் கடைக் குறைந்து ‘அண்ணா' என நின்றது.

நோக்கு மிடனெல்லாம் இறைவன்றன் இன்பவடிவே அடிகட்குப் புலனாதலானும், அவ்வடிவுதானும் எல்லை காணப்படாததாய் இருத்தலானும் ‘கண் ஆர் அமுதக்கடலே’ என்றருளிச் செய்தார்.

'ஏகம்பம்' என்பது காஞ்சி நகர்.

சிவபெருமான் தன திடப்பாகத்தில் அம்மையை அடக்கிக் கொண்டமைப்பற்றிப் ‘பாகம் பெண்ணுருவானாய்' என்றார்.

கு

‘பாகம்’ என்பது பகு என்னும் முதனிலையிற் பிறந்து ஒரு கூறு எனப் பொருடருந் தமிழ்ச் சொல்; இது வடமொழியினுஞ் சென்று வழங்கு;ம.

66

'உரு வென்றது மனனுணர்வாய் நிற்குங் கருத்துப் பொருள்” எனவும், “வடிவாவது கட்புலனாகியே நிற்ப தென வும் நச்சினார்க்கினியர் (தொல்காப்பியப் பாயிரவுரை) ஈண்டு இறைவற்கு உரு வென்றது அறிவுருவேயாம் என்க.

ஓதுதலின்*

நிறத்தானன்றி உருவு தெரியாமையின் நிறத்தின் பெயரான உரு அதனை யுடைய பொருண்மேல் ஆயிற்று; 'உரு' தமிழ்ச் சொல். 'உருவம்' சிவந்த நிற மெனப் பொருடருதலை “உருவப் பல்பூத் தூஉய்” என்னுந் திருமுருகாற்றுப்படை அடிக்கு நச்சினார்க்கினியர் உரைத்த உரையுட் காண்க.

மேவுதல் - பொருந்தல். “மிகன் மேவல் மெய்ப்பொருள் காணார்” என்புழிப்* (திருக்குறள் 857) பரிமேலழகியா ருரைத்த வுரையில் இஃதிப் பொருட்டாதல் காண்க.

பற்று

-

பற்றுக்கொடு. "பரிந்தோம்பிப் பற்று அற்றே மென்பர்” என்பதற்குப்* (திருக்குறள் 88) பரிமேலழகியார் கூறிய வுரையைக் காண்க.

கோகழி - திருப்பெருந்துறை; இஃதிப் பொருட்டாதல் மேலே விரித்துரைத்தாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/379&oldid=1589874" இலிருந்து மீள்விக்கப்பட்டது