உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

347

மேவுதல்' விரும்புதல் எனவும் பொருடருதல் “இரந்து கோள் மேவார்”* (திருக்குறள் 1059) என்பதனுரையிற் காண்க.

-

பாங்கு அழகு; திவாகரம்.

‘விடங்கம்' ஆண்மை எனப் பொருள்படும் வடசொல்.

அடைந்தவர்க் கருளும் அப்பா போற்றி

இத்தி தன்னின் கீழ்இரு மூவர்க்

கத்திக் கருளிய அரசே போற்றி தென்னா டுடைய சிவனே போற்றி

165 எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி ஏனக் குருளைக் கருளினை போற்றி மானக் கயிலை மலையாய் போற்றி அருளிட வேண்டும் அம்மான் போற்றி இருள்கெட அருளும் இறைவா போற்றி

170 தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி

6

-

அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி - சார்ந்தவர்க்கு அருள் செய்யும் அப்பனே போற்றி, இத்தி தன்னின் கீழ் இரு மூவர்க்கு அத்திக்கு அருளிய அரசே போற்றி இத்தி மரத்தின் நீழற்கீழ் இயக்கியர் அறுவர்க்கும் யானைக்கும் அருள்செய்த அரசே போற்றி, தென்னாடு உடைய சிவனே போற்றி தென்றமிழ் நாட்டினை அரசு உரிமையாக உடை சிவபெருமானே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி எந்த நாட்டிலுள் ளார்க்குந் தலைவனே போற்றி, ஏனைக் குருளைக்கு அருளினை போற்றி பன்றிக்குட்டிகட்குப் பாலூட்டி அருள் செய்தவனே போற்றி, மானக் கயிலை மலையாய் போற்றி - பெருமையுடைய கயிலை மலையை உறையுளாக உடையவனே போற்றி, அருளிட வேண்டும் அம்மான் போற்றி - அருள் செய்திடல் வேண்டும் மாமனே போற்றி, இருள் கெட அருளும் இறைவா போற்றி ஆணவஇருள் கெடும்படி அருள்புரியும் தலைவனே போற்றி, தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி என்பதை அடியேன் தமியேன் தளர்ந்தேன் போற்றி என மாற்றி அடியனே னாகிய தனியேன் தளர்வுற்றேன் பெருமானே போற்றி என்றவாறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/380&oldid=1589879" இலிருந்து மீள்விக்கப்பட்டது