உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

திருச்சிற்றம்பலம்

திருவாசகச் சிறப்புப்பாயிரம்

ஆக்கியோன் பெருமையும் நூற்சிறப்பும் உணர்த்துவதாகிய இந்நூற் சிறப்புப் பாயிரம் வருமாறு :

நேரிசை வெண்பா

தொல்லை யிரும்பிஅறவிச் சூழுந் தளைநீக்கி அல்லல்அறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன் திருவா சகமென்னுந் தேன்.

இதன் பொருள்) எல்லை மருவா - முடிவுபெறாத, நெறி - வீட்டு வழியை அளிக்கும் - தரும், வாதவூர் எங்கோன் - திருவாத வூரிற்றிருஅவதாரம் செய்தருளிய எம் மாணிக்கவாசகப் பெருமான் திருவாய் மலரிற் றோன்றிய, திருவாசகம் என்னுந் தேன் திருவாசகமென்று சொல்லப்படும் தேன், தொல்லை இரும்பிறவி - தொன்றுதொட்டு வரும் பெரும் பிறவியாகிய, குழும்தளை உயிரைச் சூழ்ந்த கட்டினை, நீக்கி - போக்கி, அல்லல் அறுத்து - துன்பத்திற்கு ஏதுவான அறியாமையை அறுத்து ஆனந்தம் ஆக்கியது - இன்பத்தை வுளைத்தது என்ற வாறு ஏகாரம் தேற்றப் பொருளில் வந்தது அசைநிலை யென்னுமாம்.

-

'எல்லை மருவா நெறியளிக்கும்' என்னுஞ் சொற்றொடர் மாணிக்கவாசகப் பெருமானாகிய ஆக்கியோன் பெருமையை விளக்கி நின்றது. இதனைத் திருவாசகத்திற்குச் சிறப்பாக ஏற்றுவாரும் உளர். அங்ஙனம் ஏற்றின் ஆக்கியோன் பெருமை கூறுஞ்சொற்றொடர் இல்லையாகிச் சிறப்புப்பாயிரஇலக்கணங் குறையுமாதலானும், முதலிரண்டடிகளுந் திருவாசகச் சிறப்பை நன்கு விளக்குதலின் இதனையும் அச்சிறப்பே கூறுவதாக அதன் மேலேற்றுதல் 'மிகைபடக் கூறுதல்' என்னுங் குற்றமாய்

க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/38&oldid=1589171" இலிருந்து மீள்விக்கப்பட்டது