உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

-

திருவாசக விரிவுரை

-

351

எனப் பொருளுரைக்க, உறவே உயிரே போற்றி, சிறவே போற்றி - சிறப்பே போற்றி, சிவமே போற்றி - சிவமே போற்றி, மஞ்சா போற்றி மழையே போற்றி, மணாளா போற்றி மணவாளனே போற்றி, பஞ்சு ஏர் அடியாள் பங்கா போற்றி-செம்பஞ்சுக் குழம்பு ஊட்டிய அழகுவாய்ந்த திருவடிகளை யுடைய அம்மையை ஒரு கூற்றில் உடையவனே போற்றி, அலைந்தேன் நாயேன் அடியேன் போற்றி துன்பமுற்றேன் நாயினேனாகிய அடி அடியோன் பெருமானே போற்றி, இலங்கு கூடர் எம் ஈசா போற்றி - விளங்காநின்ற ஒளியினையுடை எம் ஈசனே போற்றி என்றவாறு. இடம்; பிங்கலந்தை. நூற்றறுபத்தொன்பதாம் அடியில் ஒரு நிலைக்களன் காணாது தாம் மதியராய்த் தளர்வுற்ற மையினைக் கூறினாராகலின், அதனை அடுத்த அடியில் தாம் ஒருநிலைக்களன் கொள்ளுமாறு தமக்கு அருள்செய்தல் வேண்டுமெனக் குறை இரந்தார். இவ்வாறு பொருளுரைக்க று வறியாதார் ‘கள்ளம்' களம்என ஆயிற்றெனக் கொண்டு ஓரியையுமின்றிப் பொருந்தாவுரை கூறினார். களம் கொளவும் கருதவும் என உம்மை விரித்துரைக்க.

களம்

-

ங்கு' ஈண்டு இம்மை யென்னும் பொருள்மேல் நின்றது. இம்மைக்கண் அருள் பெற்றார்க்கன்றி மறுமைக்கண் அப்பேறு வாய்த்தல் துணியப்படாமையி;ன ‘இங்கு அருளாய்' என்றார்.

கடவுளர் தாம் இறவாமைப் பொருட்டுப் பாற்கடல மிழ்தை வேண்டி முயன்றவராக, இறைவன் அவரைப் பாது காத்து அவர்க்கு அவ்வமிழ்தை நுகர்வித்தற்பொருட்டு, அக் கடலின்கண் எழுந்த நஞ்சை அயின்றும் தான் இறப்பின்றியே இருந்தமையின் இவனே எல்லாம் வல்ல முழுமுதற் கடவுள் என்றறிவிப்பார் ‘நஞ்சே அமுதா நயந்தாய்' என்றருளிச்செய்தார்.

66

அமுது ஆக” என்னுந் தொடரில் ‘ஆக' என்பது ‘ஆ’ எனக் கடைக்குறைந்து நின்றது.

நயத்தல் - விரும்புதல். “நயத்தக்க நாகரிகம்” என்புழியுங் காண்க. (திருக்குறள் 580)

ஐயன் - ஆசிரியன்; பிங்கலந்தை.

‘நித்ய' என்னும் வடசொல் நித்த என்றாய், விளியேற்று

நித்தா என நின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/384&oldid=1589898" இலிருந்து மீள்விக்கப்பட்டது