உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350

❖ - 25❖ மறைமலையம் - 25

நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி

அத்தா போற்றி ஐயா போற்றி

175 நித்தா போற்றி நிமலா போற்றி பத்தா போற்றி பவனே போற்றி பெரியாய் போற்றி பிரானே போற்றி அரியாய் போற்றி அமலா போற்றி மறையோர் கோல நெறியே போற்றி

180 முறையோ தரியேன் முதல்வா போற்றி உறவே போற்றி உயிரே போற்றி சிறவே போற்றி சிவமே போற்றி மஞ்சா போற்றி மணாளா போற்றி பஞ்சேர் அடியாள் பங்கா போற்றி

185 அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி இலங்கு சுடர்எம் ஈசா போற்றி

-

-

-

-

களம் கொளக் கருத அருளாய் போற்றி - அடியனேன் ஒரு நிலையான இடத்தைப் பெறவும் நின்னையே கருதவும் அருள் செய்வாயாக பெருமானே போற்றி, அஞ்சேல் என்று இங்கு அருளாய் போற்றி - அஞ்சாதே என்று சொல்லி இம்மை யிலேயே அருள் புரிவாயாக பெருமானே போற்றி, நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி - நஞ்சையே அமுதமாக விரும்பின வனே போற்றி, அத்தா போற்றி - அப்பனே போற்றி, ஐயா போற்றி - ஆசிரியனே போற்றி, நித்தா போற்றி - என்று முள்ளவனே போற்றி, நிமலா போற்றி மல மில்லாதவனே போற்றி, பத்தா போற்றி - தலைவனே போற்றி, பவனே போற்றி-எல்லாவற்றிற்கும் பிறப்பிடமானவனே போற்றி, பெரியாய் போற்றி பெரியவனே போற்றி, பிரானே போற்றி - எப் பொருட்கும் இறைவனே போற்றி, அரியாய் போற்றி - அரிய வனே போற்றி, அமலா போற்றி மல மற்றவனே போற்றி, மறையோர் கோல நெறியே போற்றி - அந்தணர் வேடத்தை மேற்கொண்டுவந்த நீதியே போற்றி, முறையோ தரியேன் முதல்வா போற்றி என்பதனைத் தரியேன் முறையோ முதல்வா போற்றி என்பதனைத் தரியேன் முறையோ முதல்வா போற்றி என மாற்றி யான் தாங்கமாட்டேன் இது நீதியோ முதல்வனே போற்றி

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/383&oldid=1589893" இலிருந்து மீள்விக்கப்பட்டது