உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

349

அத்தி' என்பது ‘ஹஸ்திந்’ என்னும் வடசொற் சிதைவு. புழைக்கை யுடைமையால் யானை அப்பெயர் பெற்றது. ஹஸ்த:- கை, ஈண்டுப் புழைக்கை மேற்று.

பண்டைக்காலந்தொட்டுச் சிவவழிபாடு தென் றமிழ் நாட்டின் கண்ணதாயே நிலை பேறுற்றுவருதலிற் ‘றென்னா டுடைய ய சிவனே' என்றார். இனித், தடாதகைப் பிராட்டியாரை L மணந்து இறைவன் தென்னாட்டில் அரசு செலுத்தினான் என்னும் புராண வழக்குப்பற்றி அவ்வாறு கூறினா ரென்றலும் ஒன்று.

பன்றிக்குட்டிக்கு அருளிய வரலாறு :- ஒருகாலத்துப் பன்னீர் இளைஞர் காட்டகத்தே தவஞ்செய்த ஒரு முனிவரனை அணுகி அவற்குச் சினத்தை விளைவித்துப் பன்றிவயிற்றிற் பிறந்துழலுமாறு சாபமிப் பெற்றுத் தமதுகுறம்பு அடங்கித் தாஞ்செய் பிழை பொறுக்குமாறு அவனை வேண்டி, இறை வனருளாற் சாபந் தீருமென அதற்கு விடுதியும் பெற்றனர். துனிவரன் சாபவழியே ஒரு காட்டுப்பன்றி வயிற்றில் அப்பன்னிரு வருங் குருளைகளாய்ப் பிறந்தவுடன், தாய்ப்பன்றி பாண்டியன் வேட்டையில் அகப்பட்டு இறக்க, ஆய்வரவு காணாது அயரும் அக்குட்டிகட்கு இறைவனே தாய்ப்பன்றி வடிவிற் சென்று பாலூட்டி அருள் புரிந்தன னென நம்பியார் திருவிளையாடல் பகர்கின்றது.

குருளை - பன்றிக்குட்டி; “நாயே பன்றி புலி முயல் நான்கும், ஆயுங் காலைக் குளை என்ப" என்று ஆசிரியர் தொல்காப்பிய கூறினமையின்* தொல்காப்பியம் மரபியல்

னார்

பன்றிக்குட்டிகளுங் ‘குருளை' எனப்பெயர் பெற்றன.

-

மானம் பெருமை; சூடாமணி நிகண்டு.

‘அம்மான்'

8)

என்னு ஞ்

சால் மாமன் என்னும்

பொருட்டாதலைப் பிங்கலந்தையிற் காண்க.

'தமி' என்பது தனி யெனப் பொருள்படுதலை “நூறுசெறு வாயினுந் தமித்துப் புக்குணினே" என்பதன் உரையிற்* (புறநானூறு 184) காண்க.

களங்கொளக் கருத அருளாய் போற்றி அஞ்சேல் என்றிங்கு அருளாய் போற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/382&oldid=1589888" இலிருந்து மீள்விக்கப்பட்டது