உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

353

‘பஞ்சு ஏர் அடியாள்' என்பதிற் பஞ்சு செம்பஞ்சுக் குழம்பு; மாதரடிக்கு ஊட்டப்படுவது அதுவேயாகலின் என்றார் சிலப்பதிகாரத்தும் (சிலப்பதிகாரம் கடலாடு காதை 82) ஏர் - அழகு; “இரப்பும் ஓர் ஏ எ ருடைத்து” என்பது திருக்குறள். (திருக்குறள் 1053)

-

அலத்தல் துன்புறுதல்; “அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால்” என்னுந் திருக்குறளினும் (1303) இப் பொருட்டாதல்

காண்க.

சுடர்

-

ஒளி; “ஒண்சுடர்ப் பாண்டிற் செஞ்சுடர் போல" என்புழி (ஐங்குறுநூறு 405) இப்பொருட்டாதல் காண்க.

கவைத்தலை மேவிய கண்ணே போற்றி குவைப்பதி மலிந்த கோவே போற்றி மலைநா டுடைய மன்னே போற்றி

190 கலையார் அரிகே சரியாய் போற்றி திருக்கழுக் குன்றிற் செல்வா போற்றி பொருப்பமர் பூவணத் தரனே போற்றி அருவமும் உருவமும் ஆனாய் போற்றி மருவிய கருணை மலையே போற்றி

165 துரியமும் இறந்த சுடரே போற்றி தெரிவரி தாகிய தெளிவே போற்றி தோளா முத்தச் சுடரே போற்றி ஆளா னவர்கட் கன்பா போற்றி ஆரா அமுதே அருளே போற்றி

200 பேராயிரம் உடைப் பெம்மான் போற்றி தாளி அறுகின் தாராய் போற்றி நீளொளி ஆகிய நிருத்தா போற்றி சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி சிந்தனைச் கரிய சிவமே போற்றி

205 மந்திர மாமலை மேயாய் போற்றி

எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/386&oldid=1589907" இலிருந்து மீள்விக்கப்பட்டது