உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354

  • மறைமலையம் - 25

சுவைத்தலை மேவிய கண்ணே போற்றி - சுவைத்தலை என்னும் ஊரில் விரும்பி யிருந்த கண் அனையாய் போற்றி, குவைப்பதி மலிந்த கோவே போற்றி - குவைப்பதி என்னும் ஊரில் மகிழ்ச்சி மிகுந்திருந்த அரசே போற்றி, மலைநாடு உடைய மன்னே போற்றி - மலைநாட்டினையுடை மன்னனே போற்றி, கலை ஆர் அரிகேசரியாய் போற்றி -நூற்பயிற்சி நிறைந்த அரி கேசரி என்னும் ஊரினை உடையாய் போற்றி, திருக்கழுக்குன்றில் செல்வா போற்றி - திருக்கழுக்குன்றில் எழுந்தருளியிருக்கும் செல்வனே போற்றி,பொருப்பு அமர் பூவணத்து அரனே போற்றி - மலைகள் பொருந்திய திருப்பூவணத்தில் எழுந்தருளிய சிவபெருமானே போற்றி, அருவமும் உருவமும் ஆனாய் போற்றி - அருவமும் உருவமும் ஆனவனே போற்றி, மருவிய கருணை மலையே போற்றி என்பதனைக் கருணை மருவிய மலையே போற்றி என மாற்றி அருள் பொருந்திய மலையை யொத்தவனே போற்றி எனப் பொருளுரைக்க, துரியமும் இறந்த சுடரே போற்றி - நான்காம் நிலையுங் கடந்த ஒளியே போற்றி, ஆள் ஆனவர்கட்கு அன்பா போற்றி-அடிமையினார்க்கு அன்பனே போற்றி, ஆரா அமுதே அருளே போற்றி - உண்டு அமையாத அமுதை யொப்பானே அருளையுடையோனே போற்றி,

-

பேர் ஆயிரம் உடைப் பெம்மான் போற்றி ஆயிரம் பெயர்களையுடைய பெருமானே போற்றி, தாளி அறுகின் தாராய் போற்றி - தாளியும் அறுகுஞ் சேர்த்துக் கட்டின மாலையை அணிந்தவனே போற்றி, நீள் ஒளியாகிய நிருத்தா போற்றி - நீண்ட ஒளியுருவாய்த் தோன்றிய கூத்தனே போற்றி, சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி சந்தனத்தோடு கலந்த திருநீற்றினை அணிந்த அழகனே போற்றி - சந்தனத்தோடு கலந்த திருநீற்றினை அணிந்த அழகனே போற்றி, சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி நினைத்தற்கு அரிதாகிய சிவமே போற்றி, மந்திர மாமலை மேயாய் போற்றி - மறை மொழிகளைப் புலப்படுத்தற்கு இடமான பெரிய மகேந்திர மலையிற் பொருந்தினவனே போற்றி, எம்தமை உய்யக் கொள்வாய் போற்றி - எம்மைப் பிழைக்குமாறு அடிமை கொள்வானே போற்றி என்றவாறு.

-

நூற்றெண்பத்தேழாம் அடி முதல் நூற்றுத்தொண்ணூற் றிரண்டாம் அடிகாறும் இறைவன் திருக்கோயில் கொண் டெழுந்தருளி அடியார்க் கருள்புரிந்த இடங்களையே அடிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/387&oldid=1589912" இலிருந்து மீள்விக்கப்பட்டது