உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

355

கூறுகின்றார் என்பதற்கு ‘மேவிய’ ‘மலிந்த' ‘உடைய' என்னும் வினைகளே சான்றா மாகலிற் ‘சுவைத்தலை' குவைப்பதி என்பனவும், அவற்றிடையே போந்த அரிகேசரி என்பதும் திருக்கழுக்குன்றம், திருப்பூவணம் முதலியவற்றைப்போற் சிவ தலங்களையே குறிப்பனவா மென்பது நன்கு பெறப்படும். இஃதயியாதார் இவைதமக்கு வேறுவேறு பொருளுரைத்து இடர்ப்படுவர். அற்றேற் கவைத்தலை குப்ைபதி அரிகேசரி முதலிய தலங்கள் யாண்டுள்ளன? அவற்றின் வரலாறுகள் யாவை? எனின்; மிகப்பழைய காலத்தவான அத்தலங்களும் அவற்றின் வரலாறுகளும் அழிந்துபட்டமையின் அவை இஞ்ஞான்று விளங்கா. இங்ஙனமே இஞ்ஞான்று விளங்கா இன்னுஞ் சில சிவதலங்கள் கீர்த்திக் திருவகவலிற் போந்தமை காண்க.

‘மலிதல்’ மிகுதிப் பொருட்டாதல் “கார்மலி கதழ்பெயல்” என்பதற்குப் (பரிபாடல்14) பரிமேழகியார் கூறிய வுரையிற் காண்க மன் - அரசன்; பிங்கலந்தை.

அருவம் உருவம் என்னும் இரு தன்மைகளும் இறைவற் குண்டென்பது.

"அருவமோ உருவாரூபம் ஆனதோ அன்றி நின்ற

உருவமோ உரைக்குங் கர்த்தா வடிவெனக் குணர்த்திங் கென்னின் அருவமும் உருவாரூபம் ஆனதும் அன்றி நின்ற உருவமும் மூன்றுஞ் சொன்ன ஒருவனுக் குள்ளவாமே'

என்னுஞ் சிவஞானசித்திச் செய்யுளாற் கண்டுகொள்க. மருவிய-பொருந்திய. இப்பொருட்டாதல்“உடனுறையு மரீ என்பதன் (சிலப்பதிகாரம் 2 61) உரையிற் காண்க.

நான்காவது எனப் பொருள்படும் ‘துரீயம்' என்னும் வட சொல் துரியம் என்றாயிற்று. சிவம் மும்மூர்த்திகளுக்கும் அப்பாற் பட்ட துரியப் பொருளென வேதாந்தமும், அந்நான் காவது பொருளுக்கும் அப்பாற் பட்டதெனச் சைவசித்தாந்தமும் வழங்குதலின்

அவ்விருவகை வழக்கும்பற்றி அடிகள் ரோவிடத்துச் சிவபெருமானை நான்காவது பொருளெனவும் மற்றும் ஓரோவிடத்து அதனையுங் கடந்த தெனவுங் கூறாநிற்பர் "தேவர்கோ வறியாத தேவ தேவன் செழும்பொழில்கள் பயந்து காத் தழிக்கும் மற்றை மூவர்கோ னாய்நின்ற முதல்வன்” “பூவேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/388&oldid=1589917" இலிருந்து மீள்விக்கப்பட்டது