உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356

மறைமலையம் - 25

கோனும் புரந்தரனும் பொற்பமைந்த, நாவேறு செல்வியும் நாரணனும் நான்மறையும், மாவேறு சோதியும் வானவருந்தா மறியாச், சேவேறு சேவடி” என்றற் றொடக்கத்துச் செய்யுட் களாற் சிவம் நான்காம்பொருள் என்றருளிச் செய்தார். மற்றுத் துரியமும் இறந்த சுடரே என்னும் இன்னோரன்னவற்றால் அஃது அந்நான்காம் பொருளையுங் கடந்ததென அறிவுறுத்தார். வடமொழி வேதாந்தமாகிய மாண்டூக்கிய உபநிடதமும் “சாந்தம் சிவம் அத்வைதம் சதுர்த்தம் அந்யந்தே " என்பதனாற் (மாண்டூக்கியோபநிடதம் 2 1) சிவம் நான்காவது பொருளா தலை வற்புறுத்துரைத்தது.

அவர் நாராயணர்க்கும் மேற்பட்டவ ரென்பதை "நாராயண பரம்ப்ரஹ்ம” என்று தைத்தீரிய ஆரணியக உபநிடதங் (தைத்திரீயம் 10, 13, 29) கூறா நிற்கும். அவர் எல்லாத் தேவர்கட்குந் தலைவரான நான்முகக் கடவுளைப் படைப்பவ ரென “விச்வாதிகோருத்ரோ மஹர்ஷிர் ஹிரண்ய கர்ப்பம் பஜ்யதஜாயமாந:” என்று அவ்வுபநிடதமே பின்னுங் கூறியது (10, 12, 28). நான்முகன், திருமால், உருத்திரன் முதலிய எல்லாம் பிறத்தலின் அவரெல்லாம் முதற் பொருளா கார் எனவும், எல்லாவற்றிற்குங் காரணனாய் வழிபடப் படுவோன் சிவபிரான் ஒருவனோயாம் எனவும் அதர்வசிகை "ஸர்வ மிதம் ப்ரஹ்ம விஷ்ணு ருத்ரேந்த்ராஸ்தே ஸம்ப்ரஸூயந்தே ஸர்வாணி சேந்த்ரியாணி ஸஹ பூதைர் நாகரணம், காரணாநாந்தியாதா காரணந்து த்யேயஸ்ஸர்வைச்வர்ய ஸம்பந்நஸ் ஸர்வேச் வரச்சம்புராகாச மத்யே" என்று புகலாநிற்கின்றது. இன்னும் பரத்திற்குப் பரமாயுள்ளவர் பிரமா; அதற்குப் பரமாயுள்ளவர் நாராயணர்; அதற்குப் பரமாயுள்ளவர் சிவபிரான் என்பது போதரப் “பராத்பரதரோப்ரஹ்மா தத் பராத்பரதோஹரி : தத்பராத்பரதோ தீச:" என்று சிவசங்கற் போபநிடதமும் உரை தருகின்றது.

இனி அத்துவிதமாயும் நான்காவதாயும் நான்முகன் திருமால் உருத்திரன் என்னும் மூவர்க்கும் அப்பாற்பட்டவராயும் உள்ளார் சிவபிரான் என்று “அத்வைதம் சதுர்த்தம் பிரஹ்ம விஷ்ணுருத்ராதீத மேக மாஸாஸ்யயம் பகவந்தம் சிவம் ப்ரணம்ய” என்னும் பஸ்மஜாபாலோபநிடதமுந் தெளித்துக் கூறுதல் காண்க. இனி, வேதாந்தத் துள்ளும் ஓரோவழிச் சைவ சித்தாந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/389&oldid=1589921" இலிருந்து மீள்விக்கப்பட்டது