உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

357

முடிநிலைப் பொருள் கடைப்பிடித் துரைக்கும்வழித் துரியங் கடந்த நிலையும் கூறப்படு மென்றற்குத் “தமீச்வராணாம் பரமம் மகேச்வரம் தம் தைவதாநாம் பரமஞ்சதைவதம் பதிம் பதீநாம் பரமம் பரஸ்தாத் விதாமதேவம் புவநேச மீட்யம்” என்னுஞ் சுவேதாசுவதரோப நிடத வுரையே (6இ7) சான்றாதல் காண்க.

பருப்பொரு ளறிவானும் உயிர்ப்பொரு ளறிவானும் கடவுளின் சிறப்பியல்பு அறியப்படாதேனும், அருட்கொருளறி வான் அது தெளியப்படுதலின் 'தெரிவரிதாகிய தெளிவே' என்றருளிச் செய்தார். “பாசஞானத்தாலும் பசுஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரனைப் பதிஞானத்தாலே, நேசமொடு முள்ளத்தே நாடி" என்ற சிவஞானசித்தித் திருப்பாட்டும் இக் கருத்தே பற்றி எழுந்ததென்க.

தோளா

தொளைக்கப்படாத; இப்பொருட்டாதல் "தோட்கப் படாத செவி” என்புழியுங் (திருக்குறள் 418) காண்க.

ஒன்பது மணிகளுள்ளும் முதலாதலின் ‘முத்தம்' எனப் பெயர் போந்தது; இது தமிழ்ச் சொல்லாதலை அறியாதார் இது ‘முக்தம்' என்னும் வட வட மொழியினின்றும் வந்ததெனப் பொருந்தாவுரை நிகழ்த்துவர்.

ஆராத - அமையாத; புறப்பொருள் வெண்பாமாலை யுரைகாரரும் “அமையாக்காதல்" என்பதற்கு ‘ஆராத அன்பு' எனப்பொருளுரைத்தார். (புறப்பொருள் வெண்பாமாலை 9 48)

பெருமான் என்னுஞ் சொல் இடை டைக் குறைந்து ஒற்று விரிந்து ‘பெம்மான்' என்றாயிற்று.

'தாளி' என்பது ஒரு படர்கொடி; அதன் இலையும் அறுகம் புல்லின் றோடும் ருங்குசேர்த்துக் கட்டிய மாலை சிவபிராற்குரித்தாகலின் 'தாளியறுகின் தாராய்' என்றார். தாளி, இலைகள் செறிந்த கொடி என்பது ‘அள்ளிலைத் தாளி கொய்யு மோனே' என்பதனானுங் காண்க, (புறநானூறு 252)

நான்முகன் திருமால் என்னும் இருவர்க்கும் இடையே ஒளி யுருவாய் நீண்டமையின் ‘நீளொளி யாகிய நிருத்தா' என்றார். ‘நிருத்தன்' என்பது ‘நிருத்த’ என்னும் வடசொல்லினின்று பிறந்த பெயர். நிருத்தம் கூத்து; ஒளியின் அசைவே ஈண்டுக் கூத்தெனப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/390&oldid=1589926" இலிருந்து மீள்விக்கப்பட்டது