உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358

மறைமலையம் - 25

சாந்து - திருநீறு; பிங்கலந்தை. சந்தனமுந் திருநீறுங் கலந்த கலவையே ‘கோபீசந்தனம்' ஆமாறும், அதனைப் பூசுமாறும் “அதிராத் ராக்நி ஹோத்ர பஸ்ம நாக்நேர் பஸிதமிதம் விஷ்ணுஸ்த்ரீணி பதேதி மந்த்ரைர் வைஷ்ணவ காயத்ரியா ப்ரணவேநோத்தூளநம் குர்யாத், ஏவம் விதிநா கோபீசந்த நஞ்ச தாரயேத்" என்று வாசுதேவோப நிடதத்துட் கூறப்பட்டமை

காண்க.

சுந்தரம் - அழகு; வடசொல்.

66

‘மன்னு மாமலை மகேந்திர மதனிற், சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும்” எனவும் (கீர்த்தித் திருவகவல் 9) மற்றவை தம்மை மகேந்திரத்திருந், துற்றவைம் முகங்களாற்பணித் தருளியும் எனவும் (19) “மந்திர மாமலை மகேந்திர வெற்பன்” எனவும் (100) அடிகள் கீர்த்தித்திருவகவலுட் பலகாலும் அருளிச் செய்தமை யின் ஈண்டு மந்திரமாமலை என்றதூஉம் அம் மகேந்திர மலையையேயாமென்க.

உய்ய

-

பிழைக்க. “கங்குல் தலைவரின், உய்குவென்" (புறப்பொருள் வெண்பா மாலை 11,10) என்புழியும் இப்பொருட் டாதல் காண்க.

L

210

புலிமுலை புல்வாய்க் கருளினை போற்றி அலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி கருங்குரு விக்கன் றருளினை போற்றி

இரும்புலன் புலர இசைந்தனை போற்றி படியுறப் பயின்ற பாவக போற்றி அடியொடு நடுஈ றானாய் போற்றி நரகொடு சுவர்க்கம் நானிலம் புகாமற் பரகதி பாண்டியற் கருளினை போற்றி

215 ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி செழுமலர்ச் சிவபுரத் தரசே போற்றி கழுநீர் மாலைக் கடவுள் போற்றி தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி பிழைப்பு வாய்ப்பொன் றறியா நாயேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/391&oldid=1589931" இலிருந்து மீள்விக்கப்பட்டது