உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

220 குழைத்தசொன் மாலை கொண்டருள் போற்றி புரம்பல எரித்த புராண போற்றி

பரம்பரஞ் சோதிப் பரனே போற்றி போற்றி போற்றி புயங்கப் பெருமான் போற்றி போற்றி புராண காரண

225 போற்றி போற்றி சயசய போற்றி.

359

-

-

-

புலிமுலை புல்வாய்க்கு அருளினை போற்றி ஒரு புலி தனது முலையை ஒரு புல்வாய் மான் கன்றுக்கு ஊட்டுமாறு அருள் செய்தவனே போற்றி, அலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி அலைகளையுடைய கடலின்மேல் நடந்தவனே போற்றி, கருங் குருவிக்கு அன்று அருளினை போற்றி கரிக் குருவிக்கு அன்றொருகால் அருள் செய்தவனே போற்றி, இரும்புலன் புலர இசைந்தனை போற்றி - பெரிய ஐம்புல அவாக்களுங் காயும்படி பொருந்தினவனே போற்றி, படி உறப் பயின்ற பாவக போற்றி நிலத்தின்கண்ணே பொருந்தப் பலகாலுங் காட்டிய தோற்றங் கள் உடையவனே போற்றி, அடியொடு நடு ஈறு ஆனாய் போற்றி - முதலொடு நடுவுங் கடையும் ஆனவனே போற்றி, நரகொடு சுவர்க்கம் நால்நிலம் புகாமல் பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி - நரகத்துடன் துறக்கம் நால்வகைப்பட்ட நிலம் என்னும் இவற்றின்கட் போகாதபடி மேலான வீடுபேற்றி னைப் பாண்டியனுக்கு அருளிச் செய்தவனே போற்றி, ஒழிவு அற நிறைந்த ஒருவ போற்றி தான் இல்லாத இடம் இல்லையாம் படி நிறைந்த ஒருவனே போற்றி, செழுமலர்ச் சிவபுரத்து அரசே போற்றி - செழுமையான மலர்கள் நிறைந்த திருப்பெருந் துறையில் எழுந்தருளிய அரசே போற்றி, கழுநீர் மாலைக் கடவுள் போற்றி - செங்கழுநீர் மாலையை அணிந்து போந்த முனிவனே போற்றி,

T

-

தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி வணங்கு வாருடைய மயக்கத்தினை அறுப்பவனே போற்றி, பிழைக்க வாய்ப்பு ஒன்று அறியா நாயேன் குழைத்த சொல் மாலை கொண்டு அருள் போற்றி - பிழைபடுதலும் பிழைபடாமையுஞ் சிறிதும் அறியாத நாயினேன் கூட்டிச் செய்த சொற்களால் ஆகிய மாலையை ஏற்றருளல் வேண்டும். பெருமானே போற்றி, புரம் பல எரித்த புராண போற்றி பட்டினங்கள் பலவற்றையும் கொளுத்திய பழையவனே போற்றி, பரம் பரம் சோதிப் பரனே

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/392&oldid=1589936" இலிருந்து மீள்விக்கப்பட்டது