உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360

❖ - 25❖ மறைமலையம் – 25

போற்றி மேலோனே போற்றி, போற்றிபோற்றி புயங்கப் பெருமான் - போற்றி போற்றி பாம்பை அணியாகவுடைய ய பெருமானே, போற்றி போற்றி புராண காரண போற்றி போற்றி பழைய காரணப்பொருளே, போற்றி போற்றி சய சய போற்றி - போயீற போற்றி வென்றி வென்றி போற்றி என்றவாறு.

-

'புலிமுலை புல்வாய்க்கு அருளிய' வரலாறு வருமாறு: பண்டொருகாற் பாண்டிநாட்டின்கட் கடப்பங்காட்டிற் புலிகள் நெருங்கிப் புல்வாய்மான்கள் அருகிவராநிற்பக் கடைப்படியாக ஒரேயொரு புல்வாய் மாண்பிணை ஒரு கன்றை ஈன்று, அதனைப் பழைய தொரு தூற்றினையிடையே மறைத்து வைத்து, அக்காட்டகத்துள்ள மடுவின்கண் நீர் பருகச் சென்றது. சென்று நீர் பருகுங்கால் அதனை ஒரு வன்னெஞ்ச வேட்டுவன் அம்பால் எய்து வீழ்த்தினான். அது கீழ்விழுந் துயிர்விடுங்கால் தன் கன்றை நினைத்து அழுதுருகி உயிர்விட்டது. அதனை யறிந்து வேரிரக்க முடையனாகிய சிவபெருமான் அக்காட்டகத்தில் வேறு ஏதும் மான்பிணை யில்லாமையை யுன்னி, அத்தூற்றுக்கு அருகினில் உலாவிய ஒரு பெண்புலியையே அதற்குப் பாலூட்டுமாறு ஏவ, அதுவும் அங்ஙனமே சென்று நாளும் அம்மான் கன்றுக்கு முலைதந்து அதனை வளர்த்துவரலாயிற் றெனப் பெரும்பற்றப் புலியூர்நம்பி திருவிளையாடற்புராணங் கூறாநிற்கும். 'புல்வாய்’ ஒருவகை மான்.

‘அலைகடல் மீமிசை நடந்த’ தென்றது கடலினை உழக்கி லைஞரைத் துன்புறுத்திய ஒரு பெருங் கெளிற்று மீனை இறைவன் வலைஞர் கோலத்திற் சென்று படுத்த திருவிளை யாடலைக் குறித்தது. "கேவேடராகிக் கெளிறது படுத்தும்” என்று முன்னும், “அலைகடல்வாய் மீன் விசிறும், பேராசை வாரியனை” என்று பின்னும் அடிகள் அருளிச்செய்தல் காண்க.

‘மீமிசை' என்பது “ஒரு பொருள் இருசொற் பிரிவில வரையார்” என்பதனான் (தொல்காப்பியம் சொல் 460) வந்தது.

கருங்குருவிக் கருளியது’ வருமாறு: முன்னொரு காலத்திற் கரிக்குருவிகள் காக்கைகளால் நலியப்பட்டு அஞ்சி யுழல்கையில் அவற்றுள் அறிவுமிக்கதொரு குருவி ‘பகை நீங்க செல்லும் வாயில் யாது?' எனத் தன்னுள் ஆராய, முந்நகர்களை நகைத் தெரிந்த இறைவனை வழிபடுதலே அதுவாமென வுணர்ந்து, நாடோறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/393&oldid=1589940" இலிருந்து மீள்விக்கப்பட்டது