உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

361

பொற்றாமரையில் முழுகிச் சிறகடித்து ஆலவா யண்ணலை வலம்வந்து வழிபட்டு வரலாயிற்று. அதுகண்ட இறைவன் இரங்கிப் பகைவரை வெல்லும் மூன்றெழுத்தா லாயதொரு மறையை அதற் கறிவுறுப்ப, அஃ ததனையோதித் தானுந் தன் கிளையும் தன்கிளைவழி வருவனவு மெல்லாம் காக்கை முதலான பெரும் பறவையினங்களை வெல்லுந் திறம்பெற்று, அதனால் ‘வலியான்' என்னும் பெயரும் பெற்றதெனப் பெரும்பற்றப் புலியூர்நம்பி திருவிளையாடல் புகலும்.

ஈண்டுப் புலன் என்றது ஐம்புல அவாக்களின் தொகுப்பை.

தூய உயிரின்கண் இறைவன் தருள் முனைத்து நிற்கு மாகலின், அவ்வருள்வழி நின்று அதனையே நோக்கி நிற்கும் அவ்வுயிர்க்கு ஐம்புல அவாக்களுங் கெட்டொழியு மென்பது பற்றி இரும்புலன்புலர இசைந்தனை என்றார். இனிப் ‘பொறி வாயில் ஐந்தவித்தான்' என்று திருவள்ளுவனார் கூறியவாறே ஐம்புல அவாக்களும் அவிய இருந்தவன் என்று இரும்புலன் புலர்தலை றைவன் மேலேற்றிக் கூறுதலுமாம் : எல்லா இன்பமும் இறைவனிடத்து உண்டாகலின், அவன் அதன் பாருட்டுப் பிறிதொன்றனை நாடவேண்டுவது இன்றென வுணர்க.எனவே, வறுத்த வித்துப்போல, ஐம்புலன்களும் இறைவனுள் நின்றே அவனை வேறுபடுத்த மாட்டாவென்க.

‘படியுறப் பயின்ற பாவக' என்றது “சேவனாகித் திண் சிலையேந்திப், பாவகம் பலபல காட்டிய பரிசி”னைக் (கீர்த்தித் திருவகவல் 81-82) குறித்தது. இறைவன் தன் அடியவர் பொருட்டு நிலத்தின் மிசைத் தோன்றிப் பல பல பாவகங்கள் காட்டிய வரலாறுகளைக் கீர்த்தித் திருவகவலுரையுட் காட்டினாம்; ஆண்டுக் காண்க.

-

படி நிலம்; "படியுடையார் பற்றமைந்தக் கண்ணும்” என்னுந் திருக்குறளைக் காண்க (606).

மலயத்துவச பாண்டியனுக்குத் திருமகளாய்த் தோன்றிய தடாதகைப் பிராட்டியாரை இறைவன் மணந்து அவ்வரசனைத் துறக்கத்தினின்றும் வருவித்து எழுகடலில் முழுகுவித்து வீடுபேறு நல்கினமையிற் பரகதி பாண்டியற் கருளினை என்றார். இதனைப் பெரும்பற்றப் புலியூர்நம்பி கூறிய மலயத்துவசனை அழைத்த திருவிளையாடல் முதலியவற்றுட் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/394&oldid=1589945" இலிருந்து மீள்விக்கப்பட்டது