உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362

  • மறைமலையம் - 25

இம் மாநிலம், குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்னும் நாற் பகுப்பில் அடங்குதலின் நால்நிலம்’ என்னும் பெயர்த்தாயிற்று. அற்றேற் பாலைநிலம் யாண் டடங்குமெனின், முல்லை குறிஞ்சியுள் அடங்கு மென்க; என்னை? "முல்லையுங் குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்து, நல்லியல் பழிந்து நடுங்கு துய ருறுத்துப், பாலை யென்பதோர் படிவங் கொள்ளும் என்று

""

ளங்கோவடிகள் அருளிச்செய்தா (சிலப்பதிகாரம் 64-66) ராகலானும், ஆசிரியர் தொல்காப்பியனார்“அவற்றுள், நடுவண் ஐந்திணை நடுவணதொழியப் படுதிரை வையம் பாத்திய பண்பே” என்று ஆணைதந்தா ராகலானும் (தொல் காப்பியம் பொருள் 2) என்பது.

நரகு, சுவர்க்கம் என்பன வடசொல்லினின்றும் பிறந்தவை.

சழுமலர்ச் சிவபுரம்' என்றது திருப்பெருந்துறையை அடிகள் அருட்பத்தில் “திருப்பெருந்துறையிற் செழுமலர்க் குருந்தம் மேவியசீர் அருத்தனே” என்றருளிச் செய்தலும் ஒத்து நோக்குக. ‘கழுநீர்மாலைக் கடவுள் போற்றி’ என்றும் அடியை இதனை யடுக்கவைத்து அருளிச் செய்திருத்தலானும் ஈண்டுச் சிவபுரம் என்றது திருப்பெருந்துறையையே யெனத் தெளியற் பாற்று.

அடிகளை ஆட்கொளல் வேண்டி இறைவன் ஆசிரியனாய் எழுந்தருளிய ஞான்று கழுநீர்மாலை யணிந்திருந்தன னென மேலு (கீர்த்தித் திருவகவல் 113 - 114) முரைத்தார்.

கடவுள் - முனிவன்; இச்சொல் இப் பொருட்டாதல் “வண்டூது சாந்தம்” என்னும் மருதக்கலியுள்ளுங் (கலித்தொகை

93) FITOST G.

மையல் - மயக்கம்; “மைய லொருவன் களித்தற்றால்' என்புழிக் (திருக்குறள் 838) காண்க.

துணித்தல் - அறுத்தல்; திவாகரம்.

பிழைப்பு - தவறுபடுதல்; இச்சொல்லை இப்பொருளி லேயே வேறிரண் டிடங்களினும் (திருச்சதகம் 66 குழைத்த பத்து 1) அடிகள் அருளிச் செய்வர். வாய்ப்பு - பிழையாமை, இப்பொருட்டாதல் “வாய்ப்பு செயல்" என்புழிக் காண்க (திருக்குறள், 948).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/395&oldid=1589950" இலிருந்து மீள்விக்கப்பட்டது