உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

363

குழைத்தல் - கூட்டிச் செய்தல்; “குழலும் யாழும் அமிழ்துங் குழைத்த” என்னுஞ் சிலப்பதிகார அடியில் (2, 58) இப்பொருள் படுதல் அறிக.

'மாலை' என்னுஞ் சொல்லின் முதற்பொருள் ஒழுங்கு; இனிப் பூ பொன் மணி சொல் முதலியவற்றால் ஒழுங்காகத் பூ தொடுக்கப்படுவனவும் மாலை எனப்படும். மாலை ஒழுங்கு எனப் பொருள்படுதல் “மாலை வெண்பற் றாலிநிரை பூட்டி" (சிலப்பதி காரம், 12, 28) என்புழிக் காண்க. இனி அது பூமாலை முதலிய வற்றை யுணர்த்தல் திவாகரத்துட் காண்க. தமிழர் பண்டு தொட்டுப் பெருகிய வழக்காய் வரும் இச்சொல்லை மாலா என்னும் வடசொற் றிரிபெனக் கூறுதல் பொருந்தாது; இத் தமிழ்ச் சொல்லே வடமொழிக்கட் சென்று மாலா எனத் திரிந்தது.

6

இரும்பு வெள்ளி பொன் என்பவற்றாலாகிய முந்நகர்களை றைவன் எரித்தனன் என்று மாபாரதங் கூறுதலிற் புரம்பல எரித்த என்றார். இவ்வரலாற்றினை ‘ஏற்றார் மூதூர் எழில் நகை எரியின், வீழ்வித்து’ (திருவண்டப்பகுதி. 158 - 159) என்ற வழி எடுத்துக் காட்டினாம்.

புயங்கம் - பாம்பு; “புஜங்க:” என்னும் வடசொற் றிரிந்தது. வான்முகிலினிடத்து இடை யிடையே பாம்புபோன் மிளிரும் மின்னொளியே இறைவன்றன் சடைமுடிக்கட் பாம்பாக உருவகஞ் செய்து வழங்கப்பட்டது.

66

முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொரு" ளாகலின் இறைவனைப் ‘புராணகாரணன்' என்றார்.

இத்திருவகலின் எல்லா அடிகளும் நாற்சீரான் வந்தமையின் இது நிலைமண்டில ஆசிரியப்பா.

இனி, இத்திருவகவலின் பொருளியைபு ஒரு சிறிது காட்டுதும்: கடவுளரிற் சிறந்த திருமாலுங் காண்டற் கரிய தன் திருவடியினையை உள்ளன்பால் உருகும் மெய்யடியார் காண்டற் பாருட் இந்நிலவுகினிடத்தே இறைவன் எளிதில் வரலாயினான் என அவனது அருட்பெருந் தகைமையை முதற் பத்தடிகாறுங் கூறினார்.

இனி அங்ஙனங் கூறுதற்கிடையே, மெய்யடியாலைத் தாயின் கருப்பையுட் கருவாய்ப் புகுத்திய நாட்டொட்டு அவர் அங்கிருந்து வெளிப்படுங்காறும் அவரை ஆண்டுவைத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/396&oldid=1589955" இலிருந்து மீள்விக்கப்பட்டது