உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364

  • மறைமலையம் - 25

பாதுகாத்துப் பின்னர்ப் பத்தாந் திங்களிற் பிறப்பித்த அவனது அருட்பெருநீர்மையை ‘யானை முதலா’ என்னும் பதினோராம் அடி துவங்கித் ‘துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்' என்னும் இருபத்தைந்தாம் அடிகாறும் எடுத்துக்கூறி, அதன்பிற் குழவிப்பருவந்தொட்டு ஆண்மைப்பருவங்காறும் நேரும் பல்வேறு இடர்களுக்கும் அவரைத் தப்புவித்துக் கொணர்ந்த பேரிரக்கச் செயலையும் நாற்பத்தொன்பதாம் அடிகாறுந் தோன்ற அருளிச்செய்தார்.

இனித் 'தெய்வ மென்பதோர் சித்தம் உண்டாகி' என்னும் நாற்பத்திரண்டாம் அடி துவங்கி, ‘அதிற்பெறு மாயை எனைப்பல சூழவும்' என்னும் ஐம்பத்தெட்டாம் அடிகாறும் முதுமைப் பருவத் துவக்கத்திற் கடவுள் நினைவு தோன்றப் பெற்ற அளவானே, பல்வேறு கொள்கைகளை யுடையாருந் தத்தங் கோட்பாடுகளே மெய்யெனக்கொண்டு காட்டி அக்கடவிடி னைவைக் கலைத்தற்கு மடிகட்டிநிற்பதுகூறி, அதன்பின் அவற்றாற் சிறிதும் உளந்திரிவுபடாமே தன் திருவருட் பேற்றையே நாடி நின்ற மெய்யடியார் வேறொரு தெய்வத்தைக் கனவினும் நினையாதபடி நிலத்தே ஆசிரிய வடிவிற் றோன்றி அவர்க்குத் தாயென அருள்புரிந்த அருட்பான்மையினைத் 'தாயே யாகி வளர்த்தனை போற்றி' என்னும் எண்பத்தேழாம் அடிகாறும் கல்லு முருக எடுத்தருளிச் செய்தார். இங்ஙனமாகத் திருமான் முதலிய கடவுளருக்கும் எட்டாத பெருமான் தன்னையுந் தம்மையும் உணரும் நிலையில் இல்லாதிருந்து உயிர்கட்குப் பிறவியைத் தந்து தம்மையுந் தன்னையும் உணருமாறு செய்து மீளாப்பேறு வழங்கு மாற்றினை மெய்யடியார்மேல் வைத்தருளிச் செய்தமை காண்க.

இனி,எண்பத்தேழாம் அடிமுதல் இருநூற்றிருபத்தைந் தாம் அடிகாறும், வடமொழி எசுர்வேதத் திடைநின்ற திருவுருத்திரமே வ போல், வணக்க மந்திரவுரை கூறி முடித்தருளினார். அடிக ளருளிய ஒப்புயர்வில்லா இம்மந்திர உரைகளே திருக் கோயில்களினும் பிற இடங்களிலும் இறைவனை வழிபடுதற்கு ஓதற்பாலன வென்று கடைப்பிடிக்க.

திருவாதவூரடிகள் அருளிய திருவாசகத் திருமறையில் முதல் நான்கு திருப்பாட்டுக்களுக்கு மறைத்திரு மறைமலையடிகள் இயற்றிய விரிவுரை முற்றுப்பெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/397&oldid=1589959" இலிருந்து மீள்விக்கப்பட்டது