உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

365

சிவமயம்

மாணிக்கவாசக அடிகளைப் போற்றி

அருளிய

புகழ்ப் பாடல்கள்

துறைமங்கலம் சிவப்பிரகாச அடிகள் அகவல்

விளங்கிழை பகிர்ந்த மெய்யுடை முக்கட்

காரணன் உரையெனும் ஆரண மொழியோ ஆதிசீர் பரவும் வாதவூர் அண்ணல் மலர்வாய்ப் பிறந்த வாசகத் தேனோ யாதோ சிறந்த தென்குவீ ராயின் வேதம் ஓதின் விழிநீர் பெருக்கி நெஞ்நெக் குருகி நிற்பவர்க் காண்கிலேம் திருவா சகமிங் கொருகால் ஓதிற் கருங்கன் மனமுங் கரைந்துகக் கண்கள் தொடுமணற் கேணியிற் சுரந்துநீர் பாய மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப் பெய்தி அன்ப ராகுநர் அன்றி

மன்பதை உலகின் மற்றையர் இலரே.

பகிர்மதி தவழும் பவளவார் சடையோன் பேரருள் பெற்றும் பெறாரின் அழுங்கி நெஞ்சநெக் குருகி நிற்பை நீயே

பேயேன் பெறாது பெற்றாற் போலக் களிகூர்ந் துள்ளக் கவலைதீர்ந் தேனே அன்ன மாடு மகன்றுறைப் பொய்கை வாதவூர் அன்ப வாத லாலே

1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/398&oldid=1589964" இலிருந்து மீள்விக்கப்பட்டது