உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐம்பது ஆண்டுகளாய் சைவத்துக்கு ஆணி போலும், தமிழுக்கு ஒரு வைரத் தூண் போலும் பிறங்கி ஆக்கம் அளித்தவர் மறைமலை அடிகள். தமிழ்ப் பண்டிதராய் இருந்தும் கணக்கிலாத அருமை வாய்ந்த ஆங்கில நூல்களை ஆய்ந்தாய்ந்தறிந்த பேரறிவாளர். பல்லாண்டு கேள்விப் பயன்பெற்ற பண்பினர். கல்வி, உய்த்துணர்வு, சொல்வன்மை மூன்றும் வாய்ந்த மூதறிவாளர். செந்தமிழ் நடையின் சுவை காண வேண்டின் இவரது பேச்சில், இவரது எழுத்தில் கண்டு களித்திருந்தேன். இவர் புகழ் தமிழ் உள்ளளவும் தரணியில் ஒளி வீசி பிறங்கும் என்பதில் ஐயம் சிறிதேனும் இல்லை.

- தணிகைமணி வ.மூ. செங்கல்வராய பிள்ளை

"தென்னாடு பன்னெடுங்காலம் தன்னை மறந்து உறங்கியது. அவ்வுறக்கம் போக்கிய பெருமை மறைமலையடிகட்கு உண்டு. அவர்தமிழ்ப் புலமையும் வடமொழிப் புலமையும் ஆராய்ச்சியும் பேச்சும் எழுத்தும் தொண்டும் தென்னாட்டை விழிக்கச் செய்தன. தென்னாடு அடிகளால் விழிப்புற்றது என்று மண்ணும் முழங்கும்; மரமும் முழங்கும்.'

உழை

உயர்

உதவு

2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை

தமிழ்மண் தொலைபேசி : 044 24339030

- திரு.வி.க.

600 017

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/402&oldid=1589983" இலிருந்து மீள்விக்கப்பட்டது