உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

368

  • மறைமலையம் 25

-

தேடுகின்ற ஆனந்தச் சிற்சபையிற் சின்மயமா

ஆடுகின்ற சேவடிக்கீழ் ஆடுகின்ற ஆரமுதே

நாடுகின்ற வாதவூர் நாயகனே நாயடியேன்

வாடுகின்ற வாட்டமெலாம் வந்தொருகால் மாற்றுதியே.

5

சேமமிகுந் திருவாத வூர்த்தேவென் றுலகுபுகழ் மாமணியே நீயுரைத்த வாசகத்தை எண்ணுதொறுங் காமமிகு காதலன்தன் கலவிதனைக் கருதுகின்ற ஏமமுறு கற்புடையாள் இன்பினும்இன் பெய்துவதே.

6

வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை

நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே

தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென் ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே.

7

வருமொழிசெய் மாணிக்க வாசகநின் வாசகத்தில்

ஒருமொழியே என்னையுமென் னுடையனையும் ஒன்றுவித்துத் தருமொழியாம் என்னிலினிச் சாதகமேன் சஞ்சலமேன்

குருமொழியை விரும்பிஅயல் கூடுவதேன் கூறுதியே.

8

பெண்சுமந்த பாகப் பெருமான் ஒருமாமேல் எண்சுமந்த சேவகன்போல் எய்தியதும் வைகைநதி மண்சுமந்து நின்றதுமோர் மாறன்பி ரம்படியாற்

புண்சுமந்து கொண்டதுநின் பொருட்டன்றோ புண்ணியனே.

வாட்டமிலா மாணிக்க வாசகநின் வாசகத்தைக் கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவைச் சாதிகளும் வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான நாட்டமுறும் என்னில்அங்கு நானடைதல் வியப்பன்றே.

திருவாதவூரர் திருத்தாள் போற்றி!

10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/401&oldid=1589978" இலிருந்து மீள்விக்கப்பட்டது