உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

367

சிவமயம்

வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகள்

அருளிய

ளுடையவடிகள் அருள்மாலை

(தரவு கொச்சக் கலிப்பா)

தேசகத்தில் இனிக்கின்ற தெள்ளமுதே மாணிக்க வாசகனே ஆனந்த வடிவான மாதவனே

மாசகன்ற நீ திருவாய் மலர்ந்ததமிழ் மாமறையின் ஆசகன்ற அநுபவநான் அநுபவிக்க அருளுதியே.

கருவெளிக்குட் புறனாகிக் கரணமெலாங் கடந்துநின்ற பெருவெளிக்கு நெடுங்காலம் பித்தாகித் திரிகின்றோர் குருவெளிக்கே நின்றழலக் கோதறநீ கலந்ததனி உருவெளிக்கே மறைபுகழும் உயர்வாத வூர்மணியே.

1

2

மன்புருவ நடுமுதலா மனம்புதைத்து நெடுங்காலம் என்புருவாய்த் தவஞ்செய்வாம் எல்லாரு மேமாக்க அன்புருவம் பெற்றதன்பின் அருளுருவம் அடைந்துபின்னர் இன்புருவம் ஆயினைநீ எழில்வாத வூரிறையே.

ரு

3

உருவண்டப் பெருமறையென் றுலகமெலாம் புகழ்கின்ற திருவண்டப் பகுதியெனுந் திருவகவல் வாய்மலர்ந்த குருவென்றப் பெருந்தவருங் கூறுகின்ற கோவேநீ இருவென்றத் தனியகவல் எண்ணமெனக் கியம்புதியே

4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/400&oldid=1589974" இலிருந்து மீள்விக்கப்பட்டது