உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

மறைமலையம் - 26

அதன்பயனையு மங்கீகரித்துச் சிவானந்தலஹரி முதலிய திவ்ய ஸ்தோந்திரங்களைப் பாடிக் கதறியழுதா ரென்று தூர்த்த மாயாவாதிக ளல்லாதவர்கள் வியந்து துதிப்பார்களாகையால், இந்தப் பூர்வபட்சி “பதிக்குப் பொருளே யில்லாதிருக்க அது பரிபூரணமென்றும், நித்திய மென்றும், சச்சிதானந்தமென்றும், பசுக்களை முத்தியிற் செலுத்துமென்றும், பசுக்கள் பதியை வணங்க வேண்டு மென்றும் இவ்வாறு பலப்பல சொல்லிப் பிரசங்கிப்பதும் எழுதுவதும் என் கொண்டோ?” என்று தூஷித்தது இவரது சங்கர குருவுக்கே நாம் போட்டதாக முடிந்து, குருத் துரோகியும் சிவத் துரோகியும் இவரைத்தவிர வேறொருவரு மில்லையென்னுஞ் சித்தாந்தம் வெளியாயினதறிக. நீரையும் உவரையு மிழுத்துவிட்டால் கடலுக்குப் பொருளேது என்று கூறிய இவரது புத்தியில், அவ்வில்பொருளா யழியுமதற்கு நாம் வியாபகத்தை மாத்திர மொப்புவது சரியாவென்று தோன் றாதது என்னை? இல்பொருளாகிய கடலில் உள் பொருளாகிய நீருவர்களை யிவரடைப்பதும், வியாபக மில் பொருள், வியாப்தி வியாப்பியங்கள் உள்பொருள்களென்று இவர் சாதிப்பதும் இவர்போன்ற த்விபாதஜந்துக்களுக்கே பயன்படத்தக்கன வென்க. அன்றியும், இவரது பிரசங்கத்தில் “கடல் முதலியன வியாவகாரிக சத்தியமாய் உலக விவகாரத்தில் சொல்லப் படுகின்றன” என்றும் “பரமார்த்திகமாயும் வேதாந்த சாஸ்திர ரீதியாயும் பார்க்குமிடத்துக் கடல் பொய்யும் நீருண்மையுமாம்" என்றும் பெறப்பட்டிருப்பதனால் அதனையுஞ் சிறிது விசாரித் தொதுக்குவாம். இவரது மதத்தில் பிரமந்தவிர ஏனை யெல்லாப் பொருளும் வியா வகாரிக சத்தியமாய்க் கொள்ளப்படுவன வேயாம். ஆகலினிப்போதிவரெடுத்துக் கொண்ட கடல் -நீர்- உவர் என்பனவும் வியாவகாரிக சத்திய மேயாம். இங்ஙனமாக, இவர் “பரமார்த்திகமாயும் வேதாந்த சாஸ்திர ரீதியாயும் கடல் பொய்யும் நீருண்மையுமாம்" என்றது எந்த மதியினால்? பரமார்த்தத்தில் கடல் பொய்யாகிற படியே யன்றோ நீரும் பொய்யாக வேண்டும்? நீர் மெய்யாகு மானால், அப்படியே யன்றோ கடலும் மெய்யாக வேண்டும்? நீரைப் பரமார்த்தத்தில் மெய்யென்று ஈண்டொப்பினவர்க்குப் பரமார்த்தத்தில்

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/109&oldid=1590150" இலிருந்து மீள்விக்கப்பட்டது