உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த மதவிசாரம்

75

இவரது வியாபக வியாப்தி வியாப்யதோஷங்களை மேலே விரித்து யாவருமறியத் தெருட்டினாம். இனி வியாபகமாதிகள் தருக்கவியலின் பாலன. இவையெல்லாச் சமயிகளுக்கும் பொது. பொதுவாகிய விதனை யாம் (சைவர்கள்) கையாளுகிறபடி யெல்லாச் சமயிகளுமே கொண்டு கூறுவர். அப்படியே மாயா வாதிகளுங் கொண்டு குதுகலிப்பர். மாயாவாதிகளுள் மணியாய்த் தோன்றிய இவர், விரித்துக் காட்டிய விதம் கேவலம் ஆபாசத்தினும் ஆபாசமாம். அவ்வாபாசம் சைவ சித்தாந்திகள் கொள்வதன்றாம். வேறு சித்தாந்திகளும் அதன் முகத்தில் விழிக்க நாணுவர். மாயாவாதிகளும் அதனை மண்ணை வெட்டிக் கீழே புதைப்பர். இந்தக் கண்ணொளியற்ற மாயாவாதி வியாபகம் கடல்” என்பது முதலியவைகளைச் சைவ சித்தாந்தியே சொல்வதாகக் கொண்டு தாறுமாறாய்ப் பேசித் தலை தடுமாறினார். மாயாவாதி மதத்தில் விவகார பரமார்த்த மிரண்டில் ஜகஜீவபரங்களை யொப்புவது விவகார ஞானம். இந்த விவகார ஞானத்தில் பரம் வியாபகமும், ஜீவன் வியாப்தியும், ஜகம் வியாப்பியமுமாம். இந்தப் பரஜீவஜகங் களுக்கு உபமானம் கடல் நீர் உவர்களேயாம். கடலினது ஸ்தானத்தினிறுத்தப்பட்ட பரம் இவரது வியாக்கியானத்தை யநுசரிக்கும் போது (கடல் அபாவபதார்த்தமா யொழிவது போலச்) சூனியப் பொருளாயிடுதல் சத்தியம். இவரது

வியாக்கியானத்தையாம் காற்கடை கொண்டெற்றினோமா கையால் வியாபகமாகிய கடலினது ஸ்தானத்தில் நின்ற வெமது பதிப்பொருளை “அபாவந்தான்” என்று இவரலறிப் போட்ட பேய்க் கூச்சலுக்கு ஸாதுக்களஞ்ச வேண்டிய ஆவசியக மின்றெனவறிக. வேதம்-சாஸ்திரம்-யாகம் - யோகம்-தவம்- தானம்-தீர்த்தம்-மூர்த்தி முதலிய யாவும் மாயாவாதிகளுக்கு வியவகார மேயாம். இந்த வியவகாரத்தைக் கையாளாத சங்கர மதத்தவரில்லை. சங்கராசாரியர் சந்திர மௌலி பூசை செய்வதன் பயன்றானென்னை? இவரது சங்கர குருவுக்குச் சந்திரமௌலியேயன்றோ வியாபகப் பொருள்? ஜீவனாகிய தானேயன்றோ வியாப்பியப்பொருள்? தன்னைப் பந்தித்த பலமும் யன்றோ வியாப்பியப் பொருள்? இத்தனையும் பொய் யென்று இவர் கூறுவது பரமார்த்தத் திலேயேயன்றோ? வியவகாரிக சத்தியமொப்பியே இவர் சிவ பூசையையும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/108&oldid=1590149" இலிருந்து மீள்விக்கப்பட்டது