உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

மறைமலையம் - 26

பிரித்தது மிகையாம். இனியிவர் வியாபக ஸ்தானத்தினின்றது இன்னவியற்கையினது என்று யாதேனுங் கண்டு கூறினாரா? தப்புந் தாறுமாக வேனும் வியாப்தி வியாப்பியங்களை விளக்கினவர் வியாபகத் தையும் விளக்குவது ஆவசியகமாகவும், அதனை விளக்காதது மதியாமா? நிற்க.

யாம் காட்டிய வாக்கியத்தில் மேலிடுநிறைவு சம நிறைவு ஒன்றின் மிடைந்த நிறைவு என வியாபக வியாப்தி வியாப்பியங்களை யினிது விளக்கியிருக்கின்றது. மேலிடு நிறைவு கடல். சமநிறைவு நீர். ஒன்றின் மிடைந்த நிறைவு உவர். நீருக்கு நிலைக்களமான இடம் கடலும், உவருக்கு நிலைக்களமான இடம் நீருமாம். கடலில் நீரடங்கியது. நீரில் உவரடங்கியது. உவரானது கடல் நீர் என்னுமிரண்டிலு மடங்காமல் நீரொன்றிலேதானே யடங்கலால், இவ்வாறு கலக்கும் வியாப்பியத்தை ஒன்றின் மிடைந்த நிறைவே” என்று கூறியபடியாம். இவ்வாறு பிரமாணத்திற் கட்டுண்டு கூறாமல் இவரது அகந்தையடியிற் கூறியது நிஸ்ப்ருஹ மென்க. நிற்க.

CC

இவர் "உபமானத்தில் கடலென்னுஞ் சொல்லுக்குப் பொருள் யாது என ஆராயின் நீரையன்றியில்லை. நீரினது நிலைமையைப் பற்றிக் கடலென்றும், ஏரியென்றும், குள மென்றும், மடுவென்றும், யாறுஎன்றும், கிணறு என்றும் சொல்லப்படுகின்றனவேயன்றி, மற்றப்படிக் கடல் முதலிய சொல்லுக்குப் பொருள் யாதென உய்த்து நோக்கின் அபாவந் தான் பொருள். கடல் முதலியன வியவகாரிக சத்தியமாய் உலக வகாரத்தில் சொல்லப்படுகின்றன. பரமார்த்திக மாயும் வேதாந்த சாஸ்திர ரீதியாயும் பொருளாகச் சோதித்துப் பார்க்குமிடத்துக் கடல் பொய்யும், நீருண்மையுமாம்” என்று பிரசங்கித்து, இவ்வுபமானத்தைக் கையாளுஞ் சைவ சித்தாந்தி களுக்குக் கடலினது ஸ்தானத்தினின்ற பதிப்பொருள் அபா வந்தான் என்றும், நின்றது நீரினது ஸ்தானத்தினின்ற பசுவே யென்றும், இனிப் பொய்யான பதியின் கண்ணே பசுபாசங்கள் எப்படி யடங்கியிருக்குமென்றும், பசுக்களையும் பாசங்களையு மிழுத்துவிட்டால் இவரது கடவுளான பதிக்குப் பொருள் ஆதாயப்பூவும், மலடி புத்திரனுந்தான் என்றும் முடிவுகட்டித் தனது புத்தியின் விசேஷத்தை வெளிப்படுத்திக் கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/107&oldid=1590148" இலிருந்து மீள்விக்கப்பட்டது