உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த மதவிசாரம்

வியாபக வியாப்தி வியாப்பியங்கள்

73

வர் வியாபக வியாத்தி வியாப்பியங்களை விசாரிப்ப வராயெழுந்து “கடல் சிவ நீரான்மா வுப்பு மலம்” என்னுந் திருவாக்கின் கருத்தை யநுவதித்துக் கொண்டு தம்மாலான சன்மார்க்க விலக்கை யெல்லாங்காட்டிச் சந்தோஷித்தார். இவரது திறமைக்குப் பரிசளிக்குங்கர்த்தா விவனென்பது தோன்ற “ராமதருமனும் பகடுமேய்க்கியாய்த் தனியிருப்ப" என்று ஸ்ரீதாயுமானச் செல்வனார் கூறினாரேனும் இவரது பசித்தாந்தத்தின் பிடரியை யிறுகப்பிடிக்கும் நமனாக வெமது நியாயசஸ்திரத்தை வீசிச் சிவனடியார்கள் களிக்கச் செய்வாம். இவர் “கடல்-வியாபகம், நீரும் உப்புங் கலந்திருத்தல்-வியாப்தி. கடலில் நீரும் உப்பும் அடங்கியிருத்தல் வியாப்பியம். இது உபமானம். உபமேயமாவது பதி-வியாபகம், பசுவும் பாசமுங் கலந்திருத்தல்-வியாப்தி, பசுவும் பாசமும் பதியினிடத்தில் அடங்கியிருத்தல்-வியாப்பியம்” என்று வியாபகமாதிகளி னிலக்கணத்தை விரித்தார். இது சுத்த பிசகு. இனி யிதற்கு "வியாபகமாதி விரிக்குங்காலை வியாபகமேலிடு நிறைவா மென்ப-வியாத்திசமநிறை வாகும் விளம்பின் - வியாப்பிய மொன்றின் மிடைந்த நிறை நிறைவே வியாபகங்கடலே வியாத்தியந் நீரே வியாப்பிய முவரென வீக்கிய நூலே வியாபக மீசன் வியாத்தியாருயிர் வியாப்பிய மலமென விளக்கிய நூலே" என்பதோத்து. இந்த நூற் பிரமாணத்தி லடங்காமல் இவரது பிரசங்கம் விபசரித்ததை யீண்டுத் தெரிவிப்பாம். இவர் நீரும் உப்புங் கலந்திருத்தல் வியாப்தி யென்றார். எந்தவிடத்திற் கலந்திருத்தல் என்று விளக்கா ராயினர். கடல் வியாபகமென்று மேலே கூறின மையால், அக்கடலிலே கலந்திருத்தலென்று கொள்க வனின், மீண்டுமிவர் வியாப்பிய லக்ஷணமாகக் கடலில் நீரும் உப்பும் அடங்கியிருத்தலைக் கூறினாராகையாலது கூடாது. இரண்டு மொரேவிதமாயின், ஒன்றற்கு வியாப்தியென்றும் மற்றொன் றனுக்கு வியாப்திய மென்றும் பேரிட்டது அஸங்கதமாம். வியாப்தியை நீரு முவருங் கலந்த தென்றும், வியாப்தியத்தை நீருமுவரும் அடங்கலென்றுங் கூறினாமெனின், நீருமுவருங் கலந்தே கட லிலடங்கினமையால் இரண்டையும் வேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/106&oldid=1590147" இலிருந்து மீள்விக்கப்பட்டது