உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

மறைமலையம் - 26

பெருஞ்செல்வம் எம்பெரியோர்க்கு முண்டென்று அவ ஞானப் பெரியோராசை கொண்டு கூறுவ தடாதென மறுத் திடுக. உலகம் யாண்டும் இல்பொருளாயிடுதல் நிரஸ்த மென்க. விரிக்கிற் பெருகும்.

இதுகாறும் யாம் பிரகாசப்படுத்திய நியாயங்களால் பூர்வபட்சியினது விவர்த்தோபாதான ஸ்தாபனம் தலை தூக்க முடியாமலடங்கி மூலதோஹாநி யாயினது சித்த மென்றுணர்க. இதனால், யாம் ஆகாயந் தனக்கு விஜாதியான பல பொருள் களாக விரிந்திடாததுபோலப் பிரமமுந் தனக்கு விஜாதியான பல பொருள்களாக விரிந்திடாது என்றதை மறுத்தவர்போல இந்து என்பவர் தலை விரித்தாடியாது அவரது மூடாவேசத்தின் பயனென்றே அறியத்தக்கது. ஆகாயங் காற்றாகவும், காற்று நெருப்பாகவும், நெருப்பு நீராகவும், நீர் நிலனாகவும் விரிந்த தில்லையென்னும் ஸத்தியத்தை மேலிடத்தில் யாமினிது பிரகாசப்படுத்தி யிருப்பதே போதும். அப்படியே பிரமம் ஜகஜீவர்களுக்கு உபாதானமாகியதென்ற விவாதமும் அடியோடே தொலைந்த வாறறிக. இந்தப் புத்திமான். பிரமம் ஜகத்துக்கு பாதாள மென்றவிடத்தில் விவர்த்தத்தைக் கட்டிக் காண்டு வெறும் வாயைமென்று விருதாகாலக்ஷேபஞ் செய்தது போல ஆகாயம்-காற்று முதலியவைகளின் றோற்ற விஷயத் திலும் விவர்த்தத்தைக் காட்டி யுள்ளம் வெதும்புகிறா ரிதென் கொலோ? இவரது மதத்தில் பிரமம் உலகமாகியது என்பதற் குக் கயிறு அரவாயிடுதலையும் கானல் நீராயிடு தலையும் உவமை யாக வெடுத்துக் கூறுவதுண்மை. இவர் அந்த வழியை விட்டு (ஆகாயம் காற்றாயிடுதலுக்கு) அரவு கயிறா யிடுதலையும், கானல் நீராயிடுதலையுமெடுத்துக்கூறி நிர்வகிக் கப் பார்க்கிறார். இனியிவர் புத்திரன் அவன் பிதாவினி முண்டாயிடுதலையுங் கயிறு அரவானதற்கும், கானல் நீரானதற்கு மாப்பிட் விவர்த்தவாதத்தில் வெந்து மடிவார்போலும். ஆகாயம்-காற்று முதலியவைகளின் றோற்றத்தை விவர்த்தவாதத்தா லிதுகாறும் எந்தவே தாந்தியும் (மாயாவாதியும்) சாதித்தது காணோம். நிற்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/105&oldid=1590146" இலிருந்து மீள்விக்கப்பட்டது