உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்க.

71

வேதாந்த மதவிசாரம் அவர்கள் சுழுத்தியி லநுபவிக்குஞ் சுகம் மறுக்கப்படாமையால், அதுவே ஸர்வஸம் பிரதிபந்ந மாயதென்றறிக. அந்தச் சுழுத்தியில் கருவிகரணங்களெல் லாமோய்ந்து ஆணவம் அல்லது அஞ்ஞானம் முனைத்துத் தோன்றுகையால், ஆன்மாவும் அஞ்ஞானமும் அபேதமாய் விளங்கும். இதனா லான்மாவுக்கநுபவம் அஞ்ஞானத்தி லென்னுமுண்மை வெளிப்படும். இவ்வுண்மை போதரவே L மாயாவாதியை நோக்கி அநுபூதிதானுமது கூடிடாது" எனவும், நீ அநு பூதியென்று கூறுவது உனது அஞ்ஞானத் தோடாம் என்பது தோன்ற “அறிவிலாமையே" எனவும் எமது சைவப் பெரியார் கூறியதுய்த்துணர்க.

66

""

-

ஆயின், சைவசமயிகள் உலகம் பொய்யென்று கூறு வதும், சிவாநுபூதிமான்கள் தாமென்பதும் யாங்ஙனமெனின், “பற்றுக பற்றற்றான்பற்றினை யப்பற்றைப், பற்றுக பற்று விடற்கு என்ற சைவப் பெரியார் திருவாக்கானே அது விளங்கும்.பற்றுக- பசுவாகிய நீ பற்றக்கடவாய், பற்றற்றான் பற்றினை பாசமில்லாத சிவபரஞ்சுடரினது திருவடிப் பற்றை, அப்பற்றைப் பற்றுக-அத்திருவடிப் பற்றை யுறுதி யாகப்பிடி, பற்றுவிடற்கு- உன்னைச் சூழ்ந்திருக்கும் மல மாயாதி தோஷங்களாகிய பாசம வைவிடுதற் பொருட்டு என்று பெறப்பட்ட உண்மையுணர்ந்தா ரவைக் கண்ணே இந்து என்பவரது ஆசங்கை விட்டுப் போமென்க ஒன்றைவிட்டு மற்றொன்றினைப் பிடித்த போது முன் பற்றியது மறக்கும். தொட்டது சிறக்கும். இது யார்க்கு மநுபவம். சிவத்தி லதீதப் படும் போது முன்பற்றியிருந்த உலக வாசனை விட்டுப்போம். அதனால், அவ்வுலகமில் பொருளா யிடுதலின்று. உலகப் பற்றொழிந்ததெனலே அதன் கருத்தாம். உலகம் இல்பொரு ளென்றும், தனக்கு வேறான பரமொன் றில்லையென்றும், தான் தன்னைக்கண்டனு பவித்தலே முத்தி யென்றுங் கூறும் அபசித்தாந்தம் (உலகம் உள்பொரு ளென்றும், தனக்கு விஜாதியான பரமொன்றுண்டென்றும், கண் கண்ணைக் காணுமாயின் தான் தன்னைக் காணுமென்று கழித்துத் தனக்குக் காட்டாகிய சிவத்தைக் கண்டநுபவித்தலே முத்தியென்றுங் கூறும்) சைவசித்தாந் தத்தோ டொத்து வாழாதாகையால் சிவ ஞானி களுக்குரிய சிவாநுபூதிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/104&oldid=1590145" இலிருந்து மீள்விக்கப்பட்டது