உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

மறைமலையம் 26

இனி யிவரிஷ்டம்போற் சொப்பனம் சுத்த பொய்யே யாகட்டும். அதனால், ஜாக்கிரவுலகு பொய்யென்றிடற்கு நியாயமில்லை. எங்ஙனமெனின், இவர் சொப்பனவுலகைப் பொய்யென்று கொண்டது எதனால்? ஜாக்கிரவுலகு மெய்யா யிருப்பதனாலன்றோ? மெய்யாகிய ஜாக்கிரவுலகையும், பொய்யாகிய சொப்பனவுலகையும் சுத்தப் பொய்யென்று கூறுவது யாங்ஙனம்? சுவாநுபூதியில் உலகந் தோன்றா மையா லெனின், “அஞ்ஞானிக்கேதுசிவமப்படியே யாகுங் காண், மெய்ஞ்ஞானிக் கிவ்வுலகம்' என்றதனாலது நிரஸ்தம். அஞ்ஞானிக்குச் சிவம் தோன்றாமையால் சிவம் இல்பொரு ளாமோ? அப்படியே மெய்ஞ்ஞானிக்கு உலகந் தோன்றா மையால் உலகம் இல் பொருளாமோ? சிவம் தோன்றாமையால் சிவத்தை இல்பொருளென்று வாதிக்கும் உலகாய தனுக்குத் தம்பியாய் மாயாவாதி கனம் பெற்றானென்க. அங்ஙனம் பெற்றவிடத்தும், உலகாயதன் புகழ் இவனை வந்தெய்த மாட்டாது.ஏனெனின், உலகாயதனுக்குச் சிவம் தோன்றாதது சத்தியம். அதனாலவன் சிவம் பொய்யென்றது அடுக்கும். மாயாவாதியின் கதி அங்ஙனமாமா? எந்த மாயாவாதிக்கு உலகந் தோன்றவில்லை? ஒருவன் வெளி வரட்டும் பார்ப்போம். மாயா வாதிக்கு உலகந் தோன்றாத அவசரமுமுண்டு. அது யாதெனின், மாயாவாத நூல்களில் நான் சுகமாய்த் தூங்கினேன் என்றொரு வசனமெழுதி யிருப்பதுண்டு. இவ்வாறு தூங்குமூஞ்சிகளா யெழும் பிரமங்களுக்குத் தூக்கத்திலுலகந் தோன்றாதது சத்தியம். இதனை யெந்தச் சமயியும் மறுக்க முடியாது கண்டீர். இவ்வநுபவம் மாயாவாதிகளுக்கும் மற்றவர்களுக்கும் ஒத்ததா கையால், மாயாவாதிகள் “நானும் பிரமம், நீயும் பிரமம், அவனும் பிரமம், யாரும் பிரமம், யாவும் பிரமம்” என்பது உசிதமே யாயதென்க. இவ்வாறு மாயாவாதிகள் பிரமமாகலாமே யொழியப் பிரமமாகிய தம்மைத்தரிசித்து, உலகந் தோன்றாத வநுபவ மெய்தி, உலகம் பொய்யென்று கூறுதற் கவகாச முண்டாயின தில்லை யறிக. “எமது பெரியோர்கள் தம்மைத் தரிசித்து உலகம் பொய்யென்றார்கள்” ஏனெனின், அது சாட்சியற்றதும், யுத்தியனுபவங்கட் கொவ்வாதது மாகை யால் கனம் பெற

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/103&oldid=1590144" இலிருந்து மீள்விக்கப்பட்டது