உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த மதவிசாரம்

69

னு

வேண்ட ா என்றதோத்து. அன்றியும். கனவின் கண்ணே பூர்வபட்சி கூறியவாறு மனம் மாத்திரம் தனியே நிற்பதின்று. "நிலவுங்கண்டத் தாக்கிய சொற்பனமதனில் வாயுபத்து மடுத்தனசத்தாதி வசனாதியாக நோக்குகரணம் புரு டனேகூட நுவல்வர்" என்று ஸ்ரீ தாயுமான சுவாமிகள் கூறியபடியே இருபத்தைந்து தத்துவங்க ணிலைபேறாகும். இவற்றுள், பூர்வபட்சி கூறிய மனமொன்று. மனமும், அத்து L ன் இருபத்துநான்கு தத்துவங்களும் நிலைபேறானபோது தோன்றத்தக்க சொப்பன ஜகத்தை நோக்குங்கால், ஜாக்கிர வுலகத் தோற்றத்துக்கிவர் தேடிய பிரமத்திற்குப் பலதுணைக ளாவசியக மென்பது சொல்லாமே யமைந்தது. துணை யின்றிச் சகத்தைத் தரமாட்டா வஸத்துப் பொருள் பிரம மென்றற்கே யிவரது சொப்பனவுலக திட்டாந்தம் பயன் செய்ததன்றி, உலகம் பொய்யென்றிடற் கோரணுத்துணையு மிடந்தந்ததின்றென்க.

இனி யிவர் சொப்பனவுலகம் ஜாக்கிரத்தி லநுபவத்துக்கு வாராமையால் பொய்யென்னலாம். அது கூடாது. சொப்பன விஷயங்கள் ஜாக்கிரத்தி லனுபவத்துக்குவந்த திவ்ய சரித் திரங்கள் புராணப் பிரசித்த மாகையாலும், இப்போதும் உலகிற் சிற்சில விஷயங்கள் சொப்பனத்திற் கண்டவை ஜாக்கிரத்திற் கைகூடுவது எவருக்கு மனுபவமாகையாலும் சொப்பனவுலகு பொய்யெனல் அசங்கதம்? சொப்பனமானது இறந்தகால ஸ்வப்னம்-நிகழ்கால ஸ்வப்னம்-எதிர்கால ஸ்வப்னம் என மூன்று வகைப்படும். முன் முன் ஜாக்கிரத்திற் கண்டதைச் சொப்பனத்திற் காணுவது இறந்த கால ஸ்வப்னமும், பின் ஜாக்கிரத்திற் காணப்போவதைச் சொப்பனத்திற் காணுவது எதிர்கால ஸ்வப்னமும், முன் ஜாக்கிரத்திற் கண்டதுமின்றிப் பின்ஜாக் கிரத்திற் காணப்போவது மின்றி இடைக்காலத்திற் புதுசாய்க் காணுவது நிகழ்கால ஸ்வப்ன முமாம். நிகழ்காலத் தினதை யெதிர்காலத்தி லபேட்சித் திடுதல் அஸங்கதமாம். அது அந்த நிகழ்காலத்தின் மாத்திரமே சுகதுக்கவடிவமாயிருந்து உயிர் களுக்கு வினைப் போகமாயிடுதல் ஸத்தியமென்றறிக. இவ் ண்மையறியாமல் கண்மூடித்தனமாய் ஸ்வப்னம் பொய் யென்னும் வாதம் சுஷ்கவாத மாயினதறிக.

வு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/102&oldid=1590143" இலிருந்து மீள்விக்கப்பட்டது