உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

2.

3.

மறைமலையம் - 26

ஜீவன் மனமாகிய கருவியாற் சொப்பனவுலகைப் பார்க்கிறான். பிரமமாகிய கருவியால் ஜாக்கிர வுலகைப் பார்ப்பவன் யாவன்? சொப்பன வுலகையும் ஜாக்கிரவுலகையும் ஜீவனே யிப்போது பார்க்கிறானா கையால் அந்தச்சீவன் சொப்பன வுலகைக் காணுங் கருவிக்கு மனமென்றும், ஜாக்கிர வுலகைக் காணுங் கருவிக்குப் பிரமமென்றும் இவர் பேரிட்டார் போலும்.

சொப்பனவுலகம் நினைவின்பாலது, நினைவு சங்கிலியும், அதினீக்கமறநிற்பது சொப்பனவுல குமாம். நினையாதபோது அவ்வுலகமில்லையாம். ஜாக்கிரவுலகம் நினைவின்பாலதோ? நினைத்த போதும், நினையாதபோதும் அந்நினைவோடு கூடியும், அதற்கு வேறாகியு நிற்கு நிலைமை யினதாத லநுபவமன்றோ? இவை யெப்படியோ திட்டாந்த முந் தாட்டாந்தமுமாகும்?

யாமெடுத்துக் காட்டிய எல்லாப்படியாலும் சொப்பன வுலக திட்டாந்தம் இந்து என்பவர் ஜாக்கிரவுலகம் பொய் யென்றிடற் குபகாரப்படா தொழிந்தது சத்தியமாயின மையால், உலகம் பொய்யென்று அவருளறியாத முடை பட்டுப் போயதறிக.

யாம் சொப்பனவுலகம் போல்வதன்று ஜாக்கிரவுல கன்றதேயன்றிப் பூர்வபட்சி கூறியபடிச் சொப்பனவுலகு பொய்யென்று கூறகில்லேமென்க. ஏனெனில், சொப்பன மென்பது ஜீவனது அவத்தைகளிலொன்று. ஏனையிரண் வத்தைகள் மெய்யாகவும், ஏனோவிஃதொன்று மாத்திரம் பொய்யாய்த் தொலையும்? ஜாக்கிரத்திலிருக்கிறபடியே ஜீவனுக்குச் சுகதுக்கானுபவங்கள் சொப்பனத்திலுமுண்ட கையால், இரண்டும் மெய்யேயாம். இரண்டு மெய்களிலும் ஒன்றுக்கொன்று கொஞ்சம் பேதமுடையதெனலே யமை வுடைத்து பொய்யென்பது மாத்திரம் பொருந்தாது “நனவின் பயனுங் கனவின்பயனும்-வினையின்பயனவை பொய்யென

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/101&oldid=1590142" இலிருந்து மீள்விக்கப்பட்டது