உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த மதவிசாரம் சித்தாந்தம்

67

மனம், அதன்சக்தி என்று பிரிப்பதன் முன்னர் அந்த மனம் எவ்வியல்பின தென்று விசாரிப்பாம். மனம் தனித் தொரு பொருளன்று. அது அந்தக் கரணங்களி லொன்று. இது ஏனைய வுட்கரணபுறக்கரணங்களோடு சீவனுக்குச் சிவபரஞ் சுடரால் மாயையிலிருந்து காரியப்படுத்திக் கொடுக்கப் பட்டது. இது ஜீவனுக்குக் கருவியாயமையாத போது இதனிடத்தில் ஒரு சேட்டையுமின்று. இதிலிருப்பதாக இந்து என்பவர் கண்டுகூறிய சத்தியின்பிரஸ்தாபமும் வெற்றுரையாம். இதனோடு எப்படி யோ பிரமம் ஸாம்யம் பெறும்?

1.

2.

3.

4.

ஜீவனது சேர்க்கையைப் பெற்றுச் சொப்பனவுலகை யுண்டுபண்ணுவது மனம். யாவரது சேர்க்கையைப் பெற்று ஜாக்கிரவுலகை யுண்டு பண்ணுவது பிரமம்?

ஜீ

மனம் ஜீவனுக்குக் கரணம். பிரமம் யாருக்குக் கரணம்?

மனம் மாயையிற் காரியப்பட்டது. பிரமம் எதிற் காரியப்பட்டது?

மனம் பிரமத்தாற் காரியப்பட்டது. பிரமம் எதனாற்

காரியப்பட்டது?

5.

மனம்

தனிப்பொருளன்று.

பொருளன் றோ?

பிரமம்

தனிப்

L

6. மனம் ஜடம். பிரமம் ஜடமோ?

இவ்வவதிகளை யோசியாது இவர் காயிதங்களைக் கறுப்பாக்கித் தமது பொய்யைப் பூரித்து வைத்தது கொண்டே மாயாவாதம் மகிமை பெற்றதாக மகிழ் வெய்தியது அறியாமை யேயாம். இவரது அபசித்தாந்தத்தின் மகிமை யிவ்வளவின தேயோ? இன்னுங் கொஞ்ச முரைப்பாம்.

1.

மனம் அசுத்தம். அதிலுண்டாகும் சொப்பனவுலகும் அசுத்தம். பிரமம் அசுத்தமோ? அதில் அசுத்த (ஜாக்கிர)வுலகு தோன்றியவாறென்னை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/100&oldid=1590141" இலிருந்து மீள்விக்கப்பட்டது