உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

மறைமலையம் - 26

இவ்வனமாக, இவர் மனத்தை யொதுக்கி மனத்தின் சத்தியினி டத்தில் சதசத்விசாரஞ் செய்யப்பட்டது மதியாமா? இவர் சத்தியை யொதுக்கின மையால், அச்சத்தியையுடைய மனத்தை ஸத்தென்று கொண்டார்போலும். இவரந்த மனதை

ஸத்தென்று தாபிப்பாரோ, வேறு எவ்வாறு தாபிப்பாரோ வறியேம், எப்படித்தாபிக்கினு மெமக்கென்னை? கற்றுணராத அவரது நிஷ்பிரயோஜனமான நிகளப் பிரசங்கம் ஸாதுக் களுக்குத் தியாஜ்யமாவ துணர்க. இவரிவ்வாறு பிதற்றியதற்கு நூற்பிரமாண முண்டா? இவரது சங்கராசாரியராவது கூறிய துண்டா? இவரிஷ்டம்போற் குழறியதையெல்லாம் யாவரொப் புவர்? இவரது பித்துபதேசம் யாருக்கு என்னவுபகாரத்தைச் செய்தது? வீணே பக்கங்களை நிரப்புவதற்கும், படிப்பில்லாத மூடர்களை மயக்குவதற்குமே யிவரது வெற்றுரைகள் பயன் பட்டவாறறிக. நிற்க.

இவரது உபமான ஸ்தானத்தினின்ற மனத்தின் கதியிவ் வாறாகுமென்றறியாமல் இவர் பிதற்றியது நிற்க, இவரது உபமேய வஸ்துவாகிய பிரமத்தில் ஜகம் விரிந்த வகையைச் சிறிது யோசிப்பாம்.. இவர் மனத்துக்குக் கூறிய அவாந்தர சத்தி-பின்னாசத்தி முதலியவைகளைப் பிரமத்துக்குங் கூறி, அச்சத்தி பிரமத்துக்கு வேறுமல்ல, பிரமமுமல்ல, ஸத்து மல்ல, அஸத்துமல்ல, ஸதஸத்துமல்ல என்று பிரசங்கித்து முடிவில் அநிர்வசனீயம் என்று ராகம் பாடியோய்ந்தார். இதற்கும் மனோ சக்திக்கு வந்தகதியே யமையும். இனி யிவர்சாதித்த வுபமானவுபமேயங்களைப் பொருந்திப் பார்ப்போம்.

பூர்வபட்சம்

மனத்தின்கணுள்ள சத்தியினின்று சொப்பனவுலகு தோன்றும். அதுபோலப் பிரமத்தின்கணுள்ள சத்தியினின்று ஜாக்கிரவுலகு தோன்றும்.

மனோசத்தின் கட்டோன்றிய சொப்பனவுலகு பொய் யாதல்போலப் பிரமசத்தியின்கட் டோன்றிய ஜாக்கிரவுலகு பாய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/99&oldid=1590140" இலிருந்து மீள்விக்கப்பட்டது