உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த மதவிசாரம்

65

மனத்திலோர் சத்தியுளது.

அது அவாந்தரசக்தி.

அன்றிப் பின்னாசத்தி.

அந்தச்சத்தி மனத்திற்கு வேறுமல்ல, மனமுமல்ல.

அச்சத்தி சத்துமல்ல, அசத்துமல்ல, சதசத்துமல்ல. அநிர்வசனீயமாம்.

அந்தச் சத்தியினின்றும் சொப்பனவுலகு தோன்றுகின்றது. அங்ஙனமே பிரமத்தின்கண் ஒரு சத்தியுளது.

அது அவாந்தரசத்தி.

அன்றிப் பின்னாசத்தி.

அந்தச் சத்தி பிரமத்துக்கு வேறுமல்ல பிரமமுமல்ல. அந்தச் சத்தி சத்துமல்ல, அசத்துமல்ல, சதசத்துமல்ல. அநிர்வசனீயமாம்.

அந்தச்சத்தியினின்றும் இச்சாக்கிரவுலகு உண்டாயிற்று.

என்று தடுமாறி யுரைத்ததோடு இன்னும் பல பயனில் சொற்களை யிரைத்துப் பக்கங்களை நிரப்பிப் பாழ் மதிப் பட்டாபிக்ஷேகஞ் செய்து கொண்ட இவரது புன்மையை யினிக்களைந்தெறிவாம்.

மனத்திலோர் சத்தியுள்ளது என்றார். அதனை யவாந்தர சத்தி-பின்னசத்தியென்று கூறிவிட்டு, அது மனத்திற்கு வேறுமல்ல என்று பேசியது யாங்ஙனம்? பின்னசத்தியென்று கூறினமையால் மனத்திற்கு வேறானது என்று பொருள் படவும், மனத்திற்கு வேறுமல்ல என்று விரோதமுண்டாக வதனை மீண்டும் பிரஸ்தாபித்தவாறென்னை? அன்றியும் அதனை அவாந்தரமென்று கூறியவாறென்னை? பின்னும் அதனை மனமுமல்லவென்றதன் கருத்தென்னை? மேலே அதனை மனத்திற்கு வேறுமல்ல வென்றது கொண்டே அது மனமாகவும், ஈண்டதனை மனமுமல்ல வென்றது மதியாமாறு யாங்ஙனம்? இம்மட்டிலமையாமல், அச்சத்தி சத்துமல்ல, அசத்துமல்ல, சதசத்துமல்ல வென்று பிரசங் கித்தவாறென்னை? இவர் சத்தியென்றது ஒரு பொருளினது அபின்னகுணத்தை, குணத்தை, சத்தா? அசத்தா? சதசத்தா? என்று விசாரியார் தத்தவ சாஸ்திரிகள். குணத்தையுடைய குணியையே விசாரிப்பர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/98&oldid=1590139" இலிருந்து மீள்விக்கப்பட்டது