உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

64

  • மறைமலையம் - 26

கின்றார். இக்கைவல்லியக்காரர் சொல்லும் அநிர்வசனீயத்தில் குழப்பத்திற் கிடமேயில்லை. ஆனால், இந்துவென்பவரோ,

CC

""

(கைவல்லியக்காரரைப் போல) மாயையாதிகளை "இல்லை யென்று சொல்லமாட்டோம்" என்கின்றார். பின்னை யென் னென்பீர்களென்று கேட்கில், இன்னபடியென்று சொல்ல முடியாத அநிர்வசனீயம் என்போமென்றார். இவருடைய அநிர்வசனீயபதத்தில் தேறுங் குழப்ப நிச்சயத்தை யாருக்குங் கொடாமல் இவரே வைத்தனுபவிக்கட்டும். இனி, அநிர் வசனீயத்திற்குச் சாதாரணப் பொருள் யாதென நோக்கு மிடத்து, வாக்குக்கு எட்டாதது என்று பொருள் படுகின்றது. வாக்குக் கேயன்றி மனதுக்கும் எட்டாத அவாங்மானச வடிவமாய் விளங்கும் விளங்கும் ஸாக்ஷாத் பிரமத்தையேயன்றோ இன்னபடியென்று ஒருவாறு சொல்லி உள்பொருள் என்று நிச்சயித்துச் சுருதிகள் குழப்பமற அறுதியிட்டன? அத்தகைய சுருதிகளுக்குங்கூடவா மாயை இன்னபடித்து என்று சொல்ல முடியாமற் போயிற்று? மாயையும் அதன் காரியமாகிய பிரபஞ்சமும் தற்கால மாயா வாதிகளுக்கு இன்னபடியென்று சொல்ல முடியாத அநிர் வசனீயம் என்றாவதில் எமக்குச் சங்கையில்லை. ஆனால், சுயம்புவெனப்படுஞ் சுருதிக்கும், அச்சுருதி நிச்சயித்த பிரமத் துக்குங்கூட மாயையை யின்னபடியென்று சொல்ல முடியாமற் போயி றென்னுங் காள்கை பயனற்ற வீண்கொள்கையே யாமென்று உய்தியைவிரும்பும் முமூட்சுக் களால் தள்ளத் தக்கதென்க. இனி, உள்ளதுமாகாமல் இல்லதுமாகாமல் ஒரு பொருளிருக்குமா? எனவருங் கேள்விக்கு ‘இருக்கும்' என்பதற்குச் சொப்பனவுலக திட்டாந்தத்தைக் காட்டினர். ஜாக்கிரமில்லாமல் சொப்பனம் நிகழவே மாட்டா தென்னுஞ் சங்கதி நண்பரறிந்திலர். இச் சொப்பனவுலக திட்டாந்தத்தை ஸ்ரீ நாயகரவர்களழிக்கும் விதம் வருமாறு:

.

சொப்பனவுலகத் திட்டாந்த அழிவு

இவர் சொப்பனவுலகத் தோற்றங் கூறியதை யீண்டு முதலநுவதித்துப் பின்னரதனாபாசத்தை யெடுத்துக் கூறுவாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/97&oldid=1590138" இலிருந்து மீள்விக்கப்பட்டது