உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த மதவிசாரம்

63

இதில்

வஸ்திரங்களில், வஸ்திரத்தைப் பார்த்தவர்கள் நூலிருக்கிறதென்றும், இந்த நூல் பஞ்சென்றும் எளிதிற் கூறுவார்கள். இவரது உபமேயமாகிய ஆகாயம்-காற்று-தீ-நீர்- நிலங்களில் நிலத்தைப் பார்த்தவர்கள் இதில் நீர் இருக்கிற தெனவாவது, நீரைப் பார்த்தவர்கள் இதில் நெருப்பிருக் கிறதென வாவது, நெருப்பைப் பார்த்தவர்கள் இதில் காற்றிருக் கிறதெனவாவது, காற்றைப் திலா காயமிருக்கிறதெனவாவது கூறமுடியுமா? இனிப் பஞ்சதன் மாத்திரைகளில் பஞ்சபூதந் தோன்றின வென்பதும், ஆகாயத்திற் காற்றும், காற்றில் நெருப்பும், நெருப்பில் நீரும், நீரில் மண்ணும் சிவனாணையாலடங்கியிருந்து வெளிப்பட்டு விவகாரத்துக்கு

வருமென்பதுமே

பரிசித்தவர்கள்

யமைவுடைத்து. இவ்வாறு தெளிந்த விவேகிகள் “பிரமத்தின்கண் இக்சாக் கிரவுலகு தோற்றமாம்" என்று இந்து வென்பவரிசைத்ததை யீன வார்த்தையென் றொதுக்கப் பின்னிடாரென்க. நிற்க.

நமது பூர்வபட்சியார் சத்துமாகாமல் அசத்துமாகாமல் சதசத்விலக்ஷணமாக ஒன்றிருக்கிறதென்றும், அது அநிர் வசனீயமெனப்படும் மாயை யென்றும் அடிக்கடி சொல்லி (ஓர் நிலைதோன்றாமல்) தாம் குழப்பத்தில் நின்றது மல்லாமல் தஞ்சொல்லைக் கேட்பவர்களையுங் குழப்பத்தில் நிறுத்தினார். உளது இலது என்பதற்கு வேறான அநிர்வசனீயம் என்பதனால் ஏதாவது ஓர் நிச்சயந் தோன்றுகிறதா? இப்படியும் ஒரு கொள்கையிருக்குமா? நண்பரை விட நண்பருடைய பூர்வீக மாயாவாதிகள் மிகு நேர்மையாளர். அவர்கள் சொல்வதில் குழப்பந் தோன்று கிறதில்லை. என்னை? நண்பரது பூர்வீகராகிய கைவல்லியக் காரர் மாயையை நிருபிக்க வந்தவிடத்தில் “அதனையின்ன தென் றுரைத்திடப்படாத அவாச்சிய வடிவம்” அதாவது அநிர்வசனீயம் என்று சொல்லி அநிர் வசனியம் என்பதற்கு அவரே அடுத்தவரியில் பொருள் விரித்திருக்கின்றார். “கதையிலாத பொய்” என்பதே அப் பொருளாம். இவ்வாறு பொருள்விரித்து இப்பொருளை வற்புறுத்து வான் மறுபடியும் “கானனீர் கிளிஞ்சில் வெள்ளி யாதிகளைப் போல் மாயையாதிகள் காலத்திரயத்து மில்லாத பொய்யே” யாமென்று தம்மேல் ஆணையிட்டுக் கூறியிருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/96&oldid=1590137" இலிருந்து மீள்விக்கப்பட்டது