உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

ஆக

மறைமலையம் - 26

மாயாவாதி யாவது, இவரது (மத்தாபகர்) சங்கராசாரியராவது காய மாதிகளைப் பஞ்சு நூல் வஸ்திர முதலியவைகளோடு உவமித்து முன்னுக்கு வந்ததுண்டா? இவரது பிரசங்கத்துக்கு ஓரு ஆதரவு மில்லாமையால் விவேகிகளிவரைப் பிச்சரென் றொதுக்கப் பின்னிடாரென்க. ஆகாயம், காற்று முதலியவை களுக்கு வியாபகவியாப்ய தர்மங்களும், பஞ்சு நூல் முதலியவை களுக்குக் காரண காரிய தர்மங்களுங் கற்றுணர்ந்த பேரியோர் கூறுவா ராகவும், இவர வற்றின் பேதந் தெரியாமலோ, அல்லது இருவித தர்மங்களையும் ஒன்றோக்கவோ குழறுபடை ஞானம் பேசினது அறிவின் குறைவேயாம். வியாபகம்-வியாப்தி-வியாப்ய மென் பவைகளை யிவரங்கீகரித்தால், இவற்றினிலக்கண மறிந்தா ரவைக்கண்ணே யிவரது ஏகான்மவாதத்துக்கு நேத்திரபங்க முண்டாகின்றது. காரண காரியங்களை யங்கீகரித்தால் ஒருவாறு இவரது மதம் ஜீவிக்கும். அதுபற்றியே இவரெல்லா வற்றையும் ஒன்றுபடுத்தப் பார்க்கிறார். அது முடியாத காரியம். உயிரும் மெய்யும் ஒன்றா? சுட்டும் வினாவும் ஒன்றா? பெயரும் வினையும் ஒன்றா? இவைகளை யெல்லாம் ஒன் ன்றென்றுகற்பிக்கு மிலக்கண மொன்று இனி இவரால் வெளிப்படுங்கால், வியாபக வியாபக வியாப்யங்களும், காரண காரியங்களு மொன்றென்றெழுதி யிவரது மாயா வாதத்தைத் தாபித்து இவர் மகிழ்ந்திடலாம். நிற்க.

இவர் பஞ்சில் நூல்-வஸ்திரங்கள் தோற்றமென்றார். இது சர்வாபத்தமாம். பஞ்சினது விகாரம் நூல் வஸ்திரங்கள். இவ்வாறு கூறுவதொழிந்து, ரஜ்ஜுவிலே சர்ப்பத்தோற்றம் போலும், கானலிலே ஜலத்தோற்றம் போலு மிவைகளைக் கூறியது மூடர்களே மெச்சத்தக்க தாயிற்று. எந்தப்பூர்வ மாயாவாதிகளு மிப்படி யாபாசப்பெட்டகங்களா யிருந்த தில்லை. தோற்றமென்றால் உண்மையிலில்லாதது என்ப திவர் கருத்து. ஆகாயத்தில் காற்று முதலியவைகளை யில்லாத பொருள்களென்று சாதிக்க விவராசைப்பட்டது அரசனிடத் மந்திரி முதலியவர்களையும், ஏனை அவனது தவலத்துகளையும், அவனது பூமி காணிகளையும் இல்லாத பொருள்களென்று சாதிப்பதோடுதானே யினப்பட்டழிந்த வாறறிக. அன்றியுமிவரது உபமானமாகிய பஞ்சு - நூல்-

தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/95&oldid=1590136" இலிருந்து மீள்விக்கப்பட்டது